
சட்டசபையில் நடந்த மோதல் அமளிக்கிடையே எடப்பாடி வெற்றி பெற்றதும் ஸ்டாலின் போன்றோர் தாக்கப்பட்டதையும் குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல் ஹாசன் பொது மக்களை கவர்னரிடம் உங்கள் மன உளைச்சலை சொல்லுங்கள் என்று கூறி கவர்னர் அலுவலக மின்னஞ்சலையும் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் ஜெ மறைவுக்கு பிறகு ஏற்பட்ட ஒரு வெற்றிடம் மிக பரவலாக தெரிகிறது.
ஊரில் என்ன நடந்தாலும் எனக்கென்ன என்று போகும் கலைத்துறையினர் தற்போது துணிச்சலாக தங்கள் அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கமலஹாசன், அரவிந்த் சாமி, பார்த்திபன், ஸ்ரீ பிரியா, ரஞ்சனி என வரிசையாக பலரும் எடப்பாடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவு செய்து வரும் நடிகர் கமல்ஹாசன் இன்று சட்டசபையில் நடக்கும் வாக்கெடுப்பு பற்ற்யம் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் களேபரங்களை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் கமல் பதிவு செய்துள்ளார்.
அதில் கவர்னரின் மின்னஞ்சலை கொடுத்து உங்கள் மன உளைச்சலை மின்னஞ்சலாக அனுப்புங்கள். மரியாதையா பேசணும்.. இது அசெம்ப்ளி இல்லை.. கவர்னர் வீடு என்று தெரிவித்து கவர்னர் அலுவலக மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துள்ளார்.
இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை மின்னஞ்சலாக அனுப்ப வேண்டும்.
சட்டசபையில் நடந்தது தவறான ஒன்று என்று கமல் பதிவு செய்துள்ளார்.
இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பார்க்கபடுகிறது