
மக்களின் எண்ணங்களுக்கு மாறாக இந்த நிகழ்வு நடந்துள்ளது. இதை கட்டாயம் சந்திப்போம்.
மக்களுடைய எண்ணங்களுக்கு மாறாக இது நடந்துள்ளது. இதெற்கெல்லாம் துரோகம் செய்துவிட்டு வரலாமா என்ற கேள்வி எழும். மாண்புமிகு அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும் வரையில் இந்த அணியை உள்ளே விட்டதில்லை. இவர்கள் எல்லாம் சசிகலா அணி. நாங்கள் மாண்புமிகு அம்மாவின் அணி . இதை நாங்கள் கட்டாயம் எதிர்கொள்வோம். எதைஅயும் சந்திப்போம். இதை நாங்கள் சந்திப்போம். இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.
மா.பா.பாண்டியராஜன் பேசியதாவது
எந்த அளவுக்கு எங்களை நோக்கி தாக்குதல் நடந்தன. அவ்வளவு கேவலமாக பேசினர். மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தது அவர்கள் இஷ்டம். இவ்வளவும் செய்து தங்கள் வாக்குகளில் பெருமளவு பதிய வைக்கமுடியவில்லை. பெருமளவு ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால்நிச்சயமாக தோற்றிருப்பார்கள்.
ஆனால் இவர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு அடைத்து வைத்து இவ்வளவு செய்தும் 122 வாக்குகள் தான் பெற முடிந்துள்ளது. இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. சிறு சறுக்கல் தோன்றியுள்ளது அவ்வளவுதான் எதிர்காலத்தில் அம்மாவின் ஆட்சி அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் அமையும். இவ்வாறு பாண்டியராஜன் பேசினார்.