கமல் – சசிகலா கூட்டணி..! சரத்குமார் நடத்திய பேச்சுவார்த்தை..! பரபரப்பு பின்னணி..!

By Selva KathirFirst Published Mar 1, 2021, 11:17 AM IST
Highlights

முதல் நாள் மூன்றாவது அணி என அறிவித்த சரத்குமார் மறுநாள் நடிகர் கமல்ஹாசனை சென்று சந்தித்ததன் பின்னணியில் சசிகலா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாள் மூன்றாவது அணி என அறிவித்த சரத்குமார் மறுநாள் நடிகர் கமல்ஹாசனை சென்று சந்தித்ததன் பின்னணியில் சசிகலா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா பிறந்த நாளன்று சசிகலாவை தியாகராயநகர் சென்று சந்தித்தவர்களில் மிக முக்கியமானர் சரத்குமார். இந்த சந்திப்பிற்கு பிறகே சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்தார். அத்தோடு ஐஜேக ரவி பச்சமுத்துவுடன் இணைந்து புதிய கூட்டணியும் சரத்குமாரால் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து மறுநாள் சரத்குமார் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமலின் கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கமலுடன் சரத்குமார் சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், மூன்றாவது அணியில் இணையுமாறு கமலுக்கு அழைப்பு விடுத்ததாக கூறினார். ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பான கேள்விக்கு சரத்குமாரிடம் தெளிவான பதில் இல்லை. தேர்தல் வெற்றிக்கு பிறகு தாங்கள் முதலமைச்சரை தேர்வு செய்ய உள்ளதாக சரத்குமார் சமாளித்துச் சென்றார். ஆனால் சரத்குமார் சென்ற பிறகு கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எந்த கட்சி தங்களுடன் கூட்டணி அமைத்தாலும் முதலமைச்சர் வேட்பாளர் தான் தான் என்பதில் மாற்றம் இல்லை என்பதை தடாலடியாக அறிவித்தார் கமல்ஹாசன்.

அத்தோடு அமமுகவோடு கூட்டணியா? என்கிற கேள்விக்கு எந்த கட்சியுடனும் இணைந்து செயல்பட தங்களுக்கு தயக்கம் இல்லை என்று கமல் தெரிவித்திருந்தார். இதன் பிறகு தான் கமல் – சரத்குமார் இடையிலான பேச்சுவார்த்தையின் முழு விவரம் தெரிய ஆரம்பித்தது. சரத்குமார் நேராக வந்து கமலை சந்தித்ததே சசிகலா கூறித்தான் என்கிறார்கள். சசிகலாவை பொறுத்தவரை இந்த தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து அதிமுகவிற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்கிற முடிவில் உள்ளார். இந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தால் தான் தேர்தலுக்கு பிறகு அதிமுகவை மறுபடியும் கைப்பற்ற முடியும் என்று அ வர் கணக்கு போடுகிறார்.

எனவே அதிமுகவின் முக்குலத்தோர் வாக்குகளை சிதறடிக்கவும், தென் மாவட்டங்களில் அதிமுகவை பலவீனப்படுத்தவும் சசிகலா காய் நகர்த்தி வருகிறார். ஏற்கனவே தேவர் மகன் திரைப்படம் மூலம் முக்குலத்தோர் மத்தியில் கமலுக்கு நல்ல மதிப்பு உண்டு. எனவே அவருடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் பாரம்பரியமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும் முக்குலத்தோடிர தங்கள் பக்கம் திருப்பிவிடலாம் என்று அவர் கணக்கு போடுகிறார். எனவே தான் சரத்குமாரை அனுப்பி சசிகலா ஆழம் பார்த்துள்ளதாக கூறுகிறார்கள். கூட்டணிக்கு கமல் ஒப்புக் கொண்டுள்ளது சசிகலாவிற்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து விரைவில் சசிகலா தரப்பில் இருந்து மிக முக்கிய நபர்கள் கமலை சந்திப்பார்கள் என்கிறார்கள். கமல் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் முரண்டு பிடிப்பது பேரத்தை அதிகரிக்க என்று கூறப்படுகிறது. அவர் எதிர்பார்க்கும் விஷயங்களை செய்து கொடுக்க சசிகலா முன்வந்தால் முதலமைச்சர் வேட்பாளர் என்கிற பிடிவாதத்தை கைவிடவும் கமல் த யாராகவே இருப்பார் என்கிறார்கள். கமலை பொறுத்தவரை இந்த தேர்தலில் கணிசமான வாக்கு சதவீதத்தை பெறுவதுடன், ஒரு சில எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எனவே அதற்கு வலுவான கூட்டணி தேவை என்பதையும் அவர் உணர்ந்தே வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

click me!