எருமைகளிடம் மன்னிப்பு கேட்ட கமல்... தேர்தல் பிரசாரத்தில் ‘மாடு’ பாசம்!

By Asianet TamilFirst Published Apr 15, 2019, 8:35 AM IST
Highlights

குளிப்பாட்ட வேண்டிய எருமை மாடுகள், எங்கேயோ இருக்கின்றன. அதை நீங்கள் கண்டிப்பாகக் குளிப்பாட்டியே தீர வேண்டும். நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லவில்லை. எருமை மாடுகள் மீது எனக்கு மரியாதை உண்டு. 

தேர்தல் பிரசாரத்தின்போது எருமை மாடுகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றத்தில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ‘எருமை மாடுகளுக்கு நன்றி’ என கமல்ஹாசன் கூறினார்
அந்த பிரசாரக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, “எருமையை குளிப்பாட்டி நிறுத்தினால்கூட கூட்டம் சேரும்; நடிகனுக்கும் அப்படித்தான் கூட்டம் சேர்கிறது என்று பேசுகிறார்கள். நீங்கள் (திமுக) நடிகனை வைத்துதான் கட்சியை வளர்த்தீர்கள் என்பதை மறந்து விட்டீர்கள்.
குளிப்பாட்ட வேண்டிய எருமை மாடுகள், எங்கேயோ இருக்கின்றன. அதை நீங்கள் கண்டிப்பாகக் குளிப்பாட்டியே தீர வேண்டும். நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லவில்லை. எருமை மாடுகள் மீது எனக்கு மரியாதை உண்டு. அதனால், அந்த மாண்புமிகு எருமை மாடுகள் என்னை மன்னிக்க வேண்டும். எருமைகள் பால் தரும்; சாணமிடும். அவற்றால் மக்களுக்கு பலன் உண்டு. அதனால், எருமை மாடுகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்.


கோபத்தில்தான் நான் அரசியலுக்கு வந்தேன். ஆனால், அரசியலுக்கு தாமதமாக வந்ததில் எனக்கு வருத்தம். சீக்கிரமாக வந்திருக்க வேண்டும். இனியாவது விட்டதைப் பிடிக்க வேலை செய்வோம். என் எஞ்சிய வாழ்நாளை, மக்களுக்காக ஒதுக்கி விட்டேன். இங்கே ஆட்சி செய்தவர்களும் செய்பவர்களும் அவர்களுடைய குடும்பங்களுக்காக மட்டுமே உழைக்கிறார்கள். ஒருத்தர் போட்டு வைத்த இரட்டை இலையில், இப்போது வேறு இருவர் சாப்பிடுகிறார்கள்.” என்று கமல்ஹாசன் பேசினார்.

click me!