உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி...* செக்ஸ் டிரேட் செய்வது போல் அழகேசன் பேசினார். எனக்கு பாதுகாப்பில்லை என்பதால்தான் போலீஸிடம் புகார் சொன்னேன்.- அமலா பால்* காவிரி தண்ணீரை பெற எடப்பாடி பழனிசாமி பெங்களூரு செல்லவில்லை. சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் பெற்றுத்தரவே செல்கிறார்.- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்* மேற்குவங்கத்தில் ஆட்சி செய்யும் எனது திரிணமுல் காங்கிரஸானது இந்த மாநிலத்துக்காக மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும்.- மம்தா பானர்ஜி* பஸ் கட்டணத்தை உயர்த்தினால் வருமானம் அதிகமாகும் என அரசு நினைத்தது. ஆனால் மக்களோ ரயில், ஆட்டோ என்று மாற்று போக்குவரத்துக்கு மாறிவிட்டனர்.- திருநாவுக்கரசர்.* பேருந்து கட்டண உயர்வுக்கு ரஜினி கருத்து சொன்னாரா? காவிரி நீர் பிரச்னையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? அரசியலுக்கு வரும் ரஜினி இதையெல்லாம் சொல்ல வேண்டும்.- சரத்குமார்* இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததே காங்கிரஸ்தான். அப்படிப்பட்ட காங்கிரஸை ஒழித்துக் கட்ட பி.ஜே.பி. நினைக்கிறது. அது எவராலும் முடியாத, நடக்காத காரியம்.- நாராயணசாமி* நிர்வாக திறமையில்லாமல், பன்னீர்செல்வத்தோடு கூட்டு சேர்ந்து, மக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்து உள்ளார் பழனிசாமி. விரைவில் இந்த நம்பிக்கை துரோகிகளின் ஆட்சி கலையும்.- செந்தில் பாலாஜி* கடைசி காலத்தில் கமல், ரஜினி இருவருக்கும் நாட்டு மக்களுக்கு எதையாவது செய்ய வெண்டும் என்ற எண்ணம் வந்திருக்கலாம். அதனாலேயே அவர்கள் அரசியல் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் கடைசி வரையில் கலைஞனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.- பாரதிராஜா* பாராளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால், எதிர்கட்சிகளுக்கு எந்த பயனும் கிடைக்க போவதில்லை. மாறாக அது அரசுக்கே பயனுள்ளதாக அமையும். ஆனால் என் கருத்திற்கு சிலர் உடன்படமாட்டார்கள்.- பிரணாப் முகர்ஜி.* அ.தி.மு.க. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த சொத்தும் கர்நாடகாவில் இல்லை. எனவே காவிரி நீரில் எங்கள் உரிமையை கோருவதில் எந்த சிக்கலும் இல்லை.- ஆர்.பி. உதயகுமார்.