அதள பாதாளத்தில் கச்சா எண்ணெயின் விலை... இந்தியாவில் உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை... கமல் கேட்ட ஒரு கேள்வி!

By Asianet TamilFirst Published Jun 13, 2020, 8:27 AM IST
Highlights

உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை சரி பாதியாக குறைந்திருக்கும் இந்த நேரத்திலும் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மக்கள் மீதான சுமையை அரசே அதிகரிக்கும் செயல். கடந்த காலங்களில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை சுட்டி காட்டி, உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் கூடவே அதிகரித்து இருந்தது.
 

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 35 டாலர் குறைத்துள்ள இந்த சூழ்நிலையில், நம் பெட்ரோல், டீசல் விலையும் பாதியாக குறையவில்லை ஏன் என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் அதன் விலையை உயர்த்துவதையோ அல்லது குறைப்பதையோ பின்பற்ற்றிவருகின்றன. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது, அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் பெரிய அளவில் வழங்குவதில்லை என்று புகார் தொடர்ந்து இருந்துவருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்தபோதும், இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறையவில்லை.


இந்நிலையில் அதைச் சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்ய  தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை சரி பாதியாக குறைந்திருக்கும் இந்த நேரத்திலும் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மக்கள் மீதான சுமையை அரசே அதிகரிக்கும் செயல். கடந்த காலங்களில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை சுட்டி காட்டி, உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் கூடவே அதிகரித்து இருந்தது.


பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலையும், பெட்ரோல் டீசலின் விலையை பெரிதும் சார்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் மீதான விலைகுறைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலையையும் குறைந்து மக்களின் பொருளாதார சுமையை குறைக்கக் கூடும். ஆனால் அதற்கு மாறாக தொடர்ந்து விலையை உயர்த்திக் கொண்டே செல்லும் மக்கள் விரோத போக்கை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். சராசரியாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 35 டாலர் குறைத்துள்ள இந்த சூழ்நிலையில், நம் பெட்ரோல், டீசல் விலையும் பாதியாக குறையவில்லை ஏன்?” என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!