டெல்லி கொரோனா: பிணங்கள் குப்பை தொட்டியில்..விலங்குகளைவிட மோசம்.. பரிசோதனை குறைவு.. வருத்தப்படும் நீதிமன்றம்

By T BalamurukanFirst Published Jun 12, 2020, 9:42 PM IST
Highlights

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா நோயாளிகள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டு வருகின்றனர். நோய் பாதித்தவரின் உடல் குப்பை தொட்டியில் கண்டெடுக்கப்படுகிறது. நோயாளிகள் இறந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு யாரும் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், பரிசோதனைகள் குறைக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க அரவிந்த்கெஜ்ரிவால் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

சென்னை மற்றும் மும்பை மாநிலங்கள் தங்கள் சோதனை எண்ணிக்கையை 16,000 முதல் 17,000 ஆக உயர்த்தியபோது டெல்லியில் மட்டும் ஒரு நாளைக்கு சோதனை எண்ணிக்கை 7,000ல் இருந்து 5,000 ஆக குறைந்துவிட்டது ஏன்? "என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்திற்கு அடுத்தப்படியாக, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ள மூன்றாவது மாநிலமாக டெல்லி உள்ளது. அங்கு இதுவரை 34,687 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,085 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 ஜூலை 31ம் தேதிக்குள் 5.5 லட்சம் பேர் வரை வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயரும் என்று அரசு எதிர்பார்ப்பதாகவும், தொற்றுநோய்களின் எண்ணிக்கையை சமாளிக்க டெல்லி நகரம் தயாராக இருப்பதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 தொற்றுநோயை கையாளும் விதம் குறித்தும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாதது குறித்தும் ஆம் ஆத்மி அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. டெல்லியில் நிலைமை கொடூரமானது, பரிதாபகரமானது. டெல்லி மருத்துவமனைகளில் மிகவும் வருந்தத்தக்க நிலைமை உள்ளது. அங்கு உடல்களுக்கு உரிய கவனிப்பும், அக்கறையும் கொடுக்கப்படுவதில்லை. நோயாளிகளின் குடும்பத்தினருக்கு உயிரிழப்புகள் குறித்து கூட தெரிவிக்கப்படுவதில்லை. இதனால், சில சந்தர்பங்களில் நோயாளிகளின் குடும்பங்கள் கடைசி சடங்குகளில் கூட கலந்துகொள்ள முடியவில்லை. 

click me!