பீலாராஜேஷ்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிதீப் கவுர்.! சில நிமிடங்களில் வாபஸ் பெற்ற மர்மம் என்ன?

Published : Jun 12, 2020, 09:15 PM IST
பீலாராஜேஷ்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிதீப் கவுர்.! சில நிமிடங்களில் வாபஸ் பெற்ற மர்மம் என்ன?

சுருக்கம்

கொரோனா தடுப்பு பணிகளை முன்னின்றி செய்து வந்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வணிக வரித்துறைச் செயலாளராக அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முருகானந்தம் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பதிலாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளராக பீலா ராஜேஷ் நியமிக்கபட்டு உள்ளார்.  

  பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என ஐ.சி.எம்.ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளர்.

   கொரோனா தடுப்பு பணிகளை முன்னின்றி செய்து வந்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வணிக வரித்துறைச் செயலாளராக அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முருகானந்தம் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பதிலாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளராக பீலா ராஜேஷ் நியமிக்கபட்டு உள்ளார்.

 பீலா ராஜேஷிற்கு பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும் வருவாய் நிர்வாக ஆணையருமான ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் பதவியையும் அவர் கூடுதலாக கவனிப்பார் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பீலா ராஜேஷின் இடமாற்றம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளர்.

"கொரோனா காலத்தில் சிறந்த தலைமையாக செயல்பட்டவர், பல மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த காரணமானவர் பீலா ராஜேஷ் என பிரதீப் கவுர் தனது "ட்விட்டர்" பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே தனது பதிவை அவர் நீக்கிவிட்டார்".என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!