
நடிகர் கமல் ஹாசன், தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி டுவிட்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். அது பொங்கல் வாழ்த்தாக மட்டுமல்லாது அரசியல் சார்ந்து உள்ளதாகவும் அது பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மறைவை அடுத்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் நடிகர் கமல் ஹாசன், சமூகம் குறித்து பல்வேறு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
கமல் விரைவில் அரசியலுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. கமலின் இந்த டுவிட்டர் பதிவால், அவருக்கு எதிராக ஆதரவு கருத்துகளும், எதிர்ப்பு கருத்துகளும் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் கமல் ஹாசன், டுவிட்டரில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவர்களும். பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனும் அவரது பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சி ஒன்றில் கமல் பேசும்போதும், அரசியல் கலந்தே பேசினார். அதாவது ரஜினிகாந்தின் திடீர் அரசியல் பிரவேசம், தன்னால்தான் என்று கூறியிருந்தார். இதற்கு ரஜினியும் வெல்டன் என்று கட்டிப்பிடித்துக் கொண்டாராம்.
கலைநிகழ்ச்சி என்றுமட்டுமல்ல, பொங்கல் வாழ்த்திலும் அவர் அரசியல் கலந்தே பேசி வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு என்று பதிவிட்டுள்ளார் கமல்.
கமல் பொங்கல் வாழ்த்து கூறியுள்ள நிலையிலும், அதிலும் அரசியல் சார்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். பொங்கல் வாழ்த்து கூறிய கமல், விதைப்பது நற்பயிராகட்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி அன்று கமல் ஹாசன் ரசிகர் மன்றத்தினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதற்கு, கண்டனம் தெரிவித்து கமல் டுவிட்டர் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது பொங்கல் வாழ்த்தை கமல் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.