
அரசியல் பயணத்தை தொடங்கும் கமல், கிராமம் ஒன்றை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன், வரும் பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் வீட்டில் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்குகிறார். மாவட்ட வாரியாக மக்களை சந்திக்கிறார் கமல். இந்த அரசியல் பயணத்துக்கு நாளை நமதே என பெயரிட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், சில பிரச்னைகளுக்கு தீர்வுகளை சொல்லாமல் செய்துதான் காட்ட வேண்டும். பேருந்து கட்டணம் உயர்வு தொடர்பாக கருத்து தெரிவித்த கமல், அனைத்து துறைகளும் லாபம் ஈட்டும் துறையாக இருக்க முடியாது. சில துறைகள் மக்களுக்கு சேவையாற்றும் துறையாக இருக்கத்தான் வேண்டும் என தெரிவித்தார்.
பிப்ரவரி 21ம் தேதி கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்கிய பிறகு, தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பேன். முதற்கட்டமாக ஒரு கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கமல் தெரிவித்தார்.