இனி ஃபுல்லா குடிச்சிட்டு ஃபிளைட் ஏறலாம் !! விமான நிலையங்களில் பார் திறக்க தமிழக அரசு முடிவு !!

First Published Jan 25, 2018, 10:42 AM IST
Highlights
TASMAC shops in Chennai airport


டெல்லி, மும்பையைத் தொடர்ந்து தற்போது சென்னை விமான நிலையத்திலும் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் தான் சாலை விபத்துகளுக்கான ஊற்றுக்கண்ணாக திகழ்வதால் அவற்றை மூட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து  தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் மூடப்பட்டன.

ஆனால் பொது மக்கள் வாழும் பகுதிகளில் மதுக்கடைகளை தமிழக அரசு மதுக்கடைகளை மீண்டும் திறந்தது. மத்திய ஆட்சியாளர்களின் உதவியுடனும், தவறான தகவல்களை அளித்தும் நகர்ப்புற எல்லைகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்க அனுமதி பெற்றுள்ளது.

இதற்கான முறைப்படியான தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே நெடுஞ்சாலைகளில் 1000 மதுக்கடைகளைத் திறந்த தமிழக அரசு, அடுத்தகட்டமாக மேலும் 500 மதுக்கடைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

அதே நேரத்தில்  உயர்வகை மதுபானங்களை வாடிக்கையாளர்களின் வீடு தேடிச் சென்று விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக செல்பேசி செயலி உருவாக்கப்பட்டிருப்பதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 30 இடங்களில் செயல்பட்டு வரும் எலைட் மதுக்கடைகளில் உள்ள உயர்வகை மதுக்களின் விவரங்கள் செயலியில் இடம் பெற்றிருக்கும் என்றும், தங்களுக்கு தேவையான மதுவகைகளை தேர்வு செய்து பணம் செலுத்தினால் உடனடியாக அவை வாடிக்கையாளரின் முகவரியில் டோர் டெலிவரி செய்யப்படும் என தமிழக  அரசு அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து மது விற்பனையை அதிகரிக்க தமிழகஅரசு பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு முக்கிய  பகுதியாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள விமானநிலையங்களில் மதுக்கடைகளை திறக்க தமிழக  அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில், மதுக்கடைகள்  திறக்கப்பட்டு மிகுந்த லாபத்துடன் இயங்கி வருகிறது என்றும் இந்த இரண்டு விமான நிலையங்களிலேயே உள்ள மதுக்கடைகளை விரிவு படுத்த  முடிவு செய்யப்பட்டுள்ளதாகது

இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் விரைவில் மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இனி விமானத்தில் நன்கு குடித்துவிட்டு பயணம் செய்யலாம்.

click me!