
பதின்நான்கு வருடங்கள் கடந்தும் இன்றும் பேசப்படுகின்ற கமலின் படைப்பு அன்பே சிவம். இந்த படம் காதல் பேசியது, அன்பை பேசியது, கம்யூனிசம் பேசியது, புரட்சி பேசியது இன்னும் பல நிலைகளில் சிறந்த படைப்பு இது. இந்த படத்தை புரிந்துக்கொள்ள பத்து முறை பார்த்தும் பத்தாது.
பல முறை பார்த்து நான் புரிந்த சில விடையம் இவை. கமலஹாசன் இந்த படத்தில் சுனாமியை பற்றி சொல்லியிருப்பது நமக்கு ஆச்சரியம் கொடுக்கலாம் ஆனால் சுனாமி மட்டும் இல்லாமல் பல துணுக்குகள் இதில் இருக்கிறது. ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
கமல் மாதவனை ஒரிசா விமானநிலையத்தில் சந்திக்கிறார் அப்போது ஒரிசாவில் வெள்ளம். இருவரும் சென்னைக்கான விமானத்திற்கு காத்திருக்கிறார்கள் வெள்ளம் காரணமாக விமான சேவை நிருத்தப்படுகிறது.
வேறு வழியில்லாமல் இருவரும் ஒரு விடுதியில் தங்குகிறார்கள். அங்கே ஒரு காட்சியில் மாதவன் ஒரிசா வெள்ளத்தை பற்றி பேசுகின்றனர் அப்போது கமல் மாதவனிடம் சொல்லுவார் வருடம் வருடம் சென்னையை வெள்ளம் தாக்கும் தாக்கும் என்று சொல்வார்கள்;
ஆனால் அது ஆந்திராவுக்கு அல்லது ஒரிசாவிக்கு சென்றுவிடும் என்று சொல்லுவார் அடுத்த காட்சியில் மாதவனிடம் கமல் சுனாமி கூட இங்கு வருமாம், சுனாமி என்றால் என்ன தெரியுமா? என்று கேட்க மாதவன் தெரியும் சார் அது பெரிய அலை என்று சொல்வார் கமல் அது பெரிய அலை அல்ல மலை ஒரிசாவில் 250 அடிகளுக்கு அலை வருமாம் ஏன் தனுஷ்கோடியில் கூட 50 அடிகளுக்கு அலை வரும் என்று சொல்லுவார்.
அடுத்த சில காட்சியில் இருவரும் ஒரு உணவு விடுதிக்கு சாப்பிட செல்வார்கள் இதற்கு இடையில் மாதவனின் பணம் அனைத்தும் திருடப்பட்டு இருக்கும் அவர் கையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மட்டுமே இருக்கும்.
உணவு விடுதியில் கார்டு வசதி இல்லாது தெரியாமல் மாதவன் சாப்பிட்டு விட்டு கார்டுயை நீட்ட கடைகாரன் வாங்க மறுப்பார். அதன் பின் ஒரு வழியாக மாதவனின் காலணியை விற்று பணம் தருவார்கள். நாம் இன்று கேஷ்லெஸ் எகனாமியால் சந்திக்கும் நிலையை அப்போதே கமல் காட்டியிருப்பார்.
அடுத்து ஒரு காட்சியில் மாதவன் கமலின் கடந்த கால காதல் பற்றி கேட்கையில் கமல் தன் காதலியை ஒரு தெருக்கூத்து போராட்டத்தில் சந்திக்கிறார். அது ஒரு தொழிலாளர் உரிமைக்கான போராட்டம்.
அந்த போராட்டத்திற்கு காரணமான பேரு முதலாளிகளின் கைக்கூலியான நாசரை கமல் வர்ணிக்கும் போது வெள்ளை தாடியுடன் இந்துத்துவ கொள்கை கொண்டவராக காட்டி இருப்பார். மேலும் அந்த தெருக்கூத்தில் மேக் இன் இந்தியா திட்டம் போன்றதொரு திட்டம் பற்றி அதற்கு பின்னால் இருக்கும் மேற்குலக நாடுகளை பற்றி தெளிவாக சொல்லி இருப்பார். அந்த போராட்டத்தை களைக்க காவல்துறை வன்முறையை கையாளுவது போல் காட்சிப்படுத்தி இருப்பார்.
அடுத்து வரும் காட்சி ஒரு ரயில் விபத்து. விபத்தில் மாட்டிக்கொண்ட ஒரு சிறுவன் இரத்தம் கிடைக்காமல் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பான். அவனுக்கு மாதவன் இரத்த தந்து உதவுவார். அந்த சிறுவன் மாதவனிடம் தனக்கு பந்து ஒன்று வேண்டும் என்று கேட்க ஒரு கடையில் பந்து வாங்க செல்வார். அங்கு SBI கிரெடிட் கார்டு அக்ஸ்ப்ட்டேட் என்ற பலகை இருக்கும். கார்டு யை பயன்படுத்தி பந்தை வாங்குவார் அந்த பந்தில் உலக வரைபடம் வரைந்து இருக்கும். கார்டு உபயோகித்து உலகத்தையே வாங்கி விடலாம் என்று சொல்லுவதை போன்று இருக்கும் அந்த காட்சி.
படத்தில் இன்னும் என்னை ஆச்சரிய பட வைத்த ஒரு கேரக்டர் நாசரின் வலது கை போன்றதொரு எப்பொழுதும் நாசர் உடன் பயணிக்கும் பாத்திரத்தில் சந்தான பாரதி...!! "Kamal is a precaution or prediction"
யார் இந்த கமல்..??