கமலை கவுண்டமணியாக்கிய நெட்டிசன்கள்! வைரலாக பரவும் கவுண்டமணி போட்டோ!

 
Published : Nov 24, 2017, 10:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
கமலை கவுண்டமணியாக்கிய நெட்டிசன்கள்! வைரலாக பரவும் கவுண்டமணி போட்டோ!

சுருக்கம்

Kamal Hassan was transferred to the photo kavundamani

பாரதியார் தோற்றத்தில் கமலின் புகைப்படம் டுவிட்டர் முகப்பு பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து
கவுண்டமணி படத்தை உலவ விட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழக அரசியல் குறித்து தீவிரமாக விமர்சனம் செய்து வருகிறார். சமூக சார்ந்த கருத்துக்களையும் அவர் பதிவிட்டு வருகிறார். நேடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கும் பத்மாவதி படம் குறித்தும், நடிகை தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும் என்றும் டுவிட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் முகப்பு படத் மாற்றி இருக்கிறார் கமல் ஹாசன். அந்த படத்தில் தன்னை பாரதியார் போல் சித்தரித்து இருக்கிறார். 

பாரதியார் போல முண்டாசு கட்டி, முறுக்கு மீசையுடன் கமல் கோவமாக காட்சி அளிக்கும் வண்ணம் அந்த புகைப்படம் உள்ளது. கமலின் இந்த படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த படம், டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில், தற்போது கமல் படத்துக்கு பதிலாக கவுண்டமணி படத்தை அதே கலர், அதே கெட்டப்பில் மார்ஃபிங் செய்து, உடனடியாக உலவி விட்டுள்ளனர் நெட்டிசன்கள். பாரதியார் தோற்றத்தில் கமலின் புகைப்படம் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ, அதற்கு கொஞ்சமும் குறையாத அளவு இந்த படமும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது கவுண்டமணியின் புகைப்படத்தை டுவிட்டர் முகப்பு பக்கத்திற்கு மாற்றி வருகின்றனர்
நெட்டிசன்கள். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!