கொடுத்த பணத்திற்கு ஒழுங்கா வேலை செய்யல... பிரசாந்த் கிஷோரை கழற்றி விடும் கமல் ஹாசன்..!

Published : Oct 19, 2019, 12:12 PM ISTUpdated : Oct 19, 2019, 12:28 PM IST
கொடுத்த பணத்திற்கு ஒழுங்கா வேலை செய்யல... பிரசாந்த் கிஷோரை கழற்றி விடும் கமல் ஹாசன்..!

சுருக்கம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தத்தை ஜனவரியுடன் நிறுத்திக் கொள்ள உள்ளதாக தகவல்கள்  வெளியாகி உள்ளது.  

சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் வேகமாக அடியெடுத்து வருகிறார். கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கமல்ஹாசனுடன் ஒப்பந்தம் போட உள்ளதாக கூறப்பட்டது.  ஆனால் ஏற்கனவே கமல்ஹாசனின் மக்கள்  நீதி மய்யம்  பிரசாந்த் கிஷோர்  நிறுவனமான ஐ-பிஏசி உடன் ஏற்கனவே ஒப்பந்தத்தில் உள்ளது. 

தமிழகத்தில் அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சியின் அடிப்படை கட்டமைப்பு முதல் பிரசாரம் வரை பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தமிழகத்தில் தனது நிறுவனத்துக்காக 150க்கும் மேற்பட்ட இளைஞர்களை பணிக்கு எடுத்து இருக்கும் பிரசாந்தின் நிறுவனம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை தொடங்கி விட்டது

.

தற்போது ஒப்பந்தத்தை புதுப்பிக்கலாமா என்பது குறித்து அந்த நிறுவனத்தின் செயல் திறன் குறித்து கட்சியில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது. ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், ’’இது கட்சியின் உள் விவாதங்கள் மற்றும் ரகசியமானவை. ஜனவரி மாதத்தில் அவர்களுடனான எங்கள் ஒப்பந்தத்தின் முடிவுக்கு வரும்போது நாங்கள் எங்கள் முடிவை எடுப்போம்.

ஐ-பிஏசி நிறுவனத்தின் செயல்முறைகள், அதற்காக  அவர்கள் வசூலிக்கும் பணத்திற்கு போதுமானதாக இல்லை  என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனாலும்,  இந்தநிறுவனத்திற்கு  மதிப்பு உள்ளதாகவும் சிலர் நினைக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல் வரை அதைத் தொடர வேண்டியது அவசியம் என்று நம்புகிறோம்’’என அவர் கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு
நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!