ஜெயலலிதா ஆவி சிதம்பரத்தை சின்னாபின்னமாக்கியது போல ஸ்டாலினையும் பழிவாங்கும்... சாபம் விடும் எடப்பாடி பழனிசாமி..!

Published : Oct 19, 2019, 11:24 AM ISTUpdated : Oct 19, 2019, 11:25 AM IST
ஜெயலலிதா ஆவி சிதம்பரத்தை சின்னாபின்னமாக்கியது போல ஸ்டாலினையும் பழிவாங்கும்... சாபம் விடும் எடப்பாடி பழனிசாமி..!

சுருக்கம்

இன்று நாம் தான் தாயை இழந்த பிள்ளைகள் போல் தவித்து வருகிறோம். ஜெயலலிதா ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது. ஜெயலலிதா மறைவுக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம். ஏனென்றால் அவர் ஜெயலலிதா தண்டனை பெறுவதற்கு பொய்யான தகவலை கொடுத்தார். இன்று ஜெயலலிதா ஆன்மா அவரை சும்மா விட்டதா? ப.சிதம்பரம் சிறையில் இருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் இருக்க ஜெயலலிதாவின் ஆன்மாதான் காரணம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசியுள்ளார். 

நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வது கட்டமாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதியும், அவருடைய மகன் ஸ்டாலினும் போட்ட வழக்குதான் காரணம். இவர்கள் பொய் வழக்கு போட்டு, அவர் சிறை சென்றதால் தான் மன உளைச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். ஆனால், இன்று மக்களை ஏமாற்ற ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஜெயலலிதா ஆன்மா அவரை சும்மா விடாது என்றார். 

இன்று நாம் தான் தாயை இழந்த பிள்ளைகள் போல் தவித்து வருகிறோம். ஜெயலலிதா ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது. ஜெயலலிதா மறைவுக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம். ஏனென்றால் அவர் ஜெயலலிதா தண்டனை பெறுவதற்கு பொய்யான தகவலை கொடுத்தார். இன்று ஜெயலலிதா ஆன்மா அவரை சும்மா விட்டதா? ப.சிதம்பரம் சிறையில் இருக்கிறார்.

ஜெயலலிதா குறித்து கனிமொழி வசை பாடி வருகிறார். அவரும் திகார் சிறையில் அடைபட்டு கிடந்தார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தால் அவரது ஆன்மா சும்மா விடாது. ஸ்டாலின் வி‌‌ஷமத்தனமான பிரச்சாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்களிடம் தவறான பிரச்சாரத்தை பரப்பி, அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

122 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதாகவும், ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறி வந்தார். ஆனால் அவரது கனவு ஒருபோதும் பலிக்கவில்லை. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தபோது தி.மு.க.வினர் மேஜை மீது ஏறி நின்று நடனமாடினார்கள். ரவுடித்தனம் செய்யும் கட்சியான தி.மு.க. என்பதை சட்டமன்றத்தில் நிரூபித்து விட்டனர். இந்த ரவுடிகளை ஆட்சியில் அமர்த்தினால் இந்த நாடு தாங்குமா? பெரும்பான்மையை நிரூபித்த பிறகு வெளியில் வந்த மு.க.ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு வந்தார். இவை அனைத்தும் அவரது சுயநலம், பதவி வெறி ஆகும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்