இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் உள்ளாட்சி தேர்தல் தேதி..! தயாராகும் தேர்தல் ஆணையம்..!

By Selva KathirFirst Published Oct 19, 2019, 10:11 AM IST
Highlights

இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்று அதிமுக நம்புவதால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்று அதிமுக நம்புவதால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் பிறகு கடந்த 2016ல் தேர்தல் நடைபெற்று இருக்க வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஆனால் திமுக உயர்நீதிமன்றம் சென்றதால் உள்ளாட்சி தேர்தல் தடைபட்டது.

பிறகு உயர்நீதிமன்றம் தடையை நீக்கிய நிலையிலும் அரசியல் சூழல் சரியில்லாத காரணத்தினால் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆர்வம்காட்டவில்லை. ஆனால் வேலூர் தொகுதி தேர்தல் அதிமுகவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. வெறும் 8 ஆயிரம் வாக்ககுள் வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவியதாலும் சட்டமன்ற தொகுதிகளின் அடிப்படையில் 3 தொகுதிகளில் அதிமுக அதிக வாக்கு வாங்கியதாகவும் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

அதே சமயம் தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கு வரும் திங்களன்று தேர்தல் நடைபெற உள்ளது. வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இரண்டு தொகுதிகளில் நாங்குநேரியில் 100 சதவீதம் வெற்றி உறுதி என்று அதிமுக நம்புகிறது. கடைசிகட்டப் பணிகள் மூலமாக விக்கிரவாண்டியில் வென்றுவிட முடியும் என்றும் அதிமுக கருதுகிறது. இந்த சூட்டோடு சூடாக உள்ளாட்சித் தேர்தலை அறிவித்து வெற்றிக்கொடி நாட்டவும் அதிமுக திட்டமிட்டுள்ளது.

எனவே இடைத்தேர்தல் முடிவுகள் சாதகமாக வரும் பட்சத்தில் அன்றைய தினமே உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்கிறார்கள். நவம்பம் 18 அல்லது 21ல் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இரருப்பதாக கூறுகிறார்கள். 

click me!