பெரியவங்க ஏதாவது சொல்லிகிட்டுதான் இருப்பாங்க… பாமக ராமதாசுக்கு கமல் பதிலடி!!

 
Published : Feb 20, 2018, 10:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
பெரியவங்க ஏதாவது சொல்லிகிட்டுதான் இருப்பாங்க… பாமக ராமதாசுக்கு கமல் பதிலடி!!

சுருக்கம்

Kamal hassan replied to doctor ramadoss

கமலும், ரஜினியும் இணைந்தாலும் 10 சதவீத வாக்குகளைத் தான் பெறுவார்கள் என பாமக ராமதாஸ் தெரிவித்திருப்பது குறித்து கருத்து கூறிய நடிகர் கமலஹாசன், அவங்க பெரியவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என கமெண்ட் அடித்தார்.

நடிகர் கமலஹாசன்   நாளை தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். மதுரையில் நாளை  மாலை நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார்.

கமல் அரசியலி ஈடுபடும் முன்பு இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை கேட்டார்.

இதைத்தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி சேஷன் , விஜயகாந்த், போன்றவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்நிலையில் நடிகர்  கமலஹாசனை ,  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீடிற்குச் சென்று சந்தித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமலஹாசன்,  புதிய கட்சி தொடங்கும் தனக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக சீமான் வந்துள்ளதாக கூறினார்.

அப்போது, கமலும், ரஜினியும் இணைந்தாலும் 10 சதவீத வாக்குகள்தான் வாங்குவார்க்ள என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள்  கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கமலஹாசன், அவர்கள் பெரியவர்கள், அப்படித்தான் பேசுவார்கள் எனது அண்ணன் சாருஹாசனையும் சேர்த்துத்ன் சொல்லுகிறேன் என நகைச்சுவையாக தெரிவித்தார்.

ஒரு முறை தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமலின் அண்ணன் சாருஹாசன், தற்போதுள்ள அரசியல்வாதிகளில் நம்பிக்கையானவர் அன்புமணிதான் என்றும், கமல் அரசியலுக்கு சரிபட்டுவரமாட்டார் எனறும் கூறியது குறிப்பிடத்தக்கது.  

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!