கல்வி ஒருசிலருக்கு மட்டுமானது என்ற நிலை தமிழகத்தில் வந்துவிடக் கூடாது… கமலஹாசன் ஆவேசம் !!!

By Selvanayagam PFirst Published Jul 22, 2019, 10:23 AM IST
Highlights

கல்வி என்பது அனைவருக்குமானது  என்று காமராஜர் எண்ணி திட்டம் தீட்டினார் அப்படியாகப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டுமானது என்று ஒதுக்கிவிடக்கூடாது என நடிகர் கமலஹாசன் ஆவேசமாக தெரிவித்தார்.
 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்றது

இதில் மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவர்க கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது காமராஜர் அவர்கள் ஆரம்பித்து வைத்த அற்புதக் கனவை யாரும் இடைஞ்சல் செய்து கலைத்து விடக்கூடாது என்ற காரணத்தினால் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கும் அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கேட்டுக்கொள்கிறேன். 

அனைவருக்கும் கல்வி என்று காமராஜர் அவர் எண்ணி திட்டம் தீட்டினார் அப்படியாகப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டுமானது என்று ஒதுக்கிவிடக்கூடாது.

கல்வி மாணவரைத் சென்றடைய வேண்டும் என்று எண்ணிய தலைவர் காமராஜர். ஆனால் இன்று கல்விக்காக தேர்வு எழுதுவதற்கு கூட பக்கத்து மாநிலத்திற்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கின்றது. இதை இங்கிருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் இணைந்து மாற்றிடவேண்டும். 

காமராஜர் அவர்களின் கனவு பெருங்கனவு, அக்கனவினை கலையாமல் செயல்படுத்திட அனைத்துக்குழந்தைகளும் கல்வி கற்றிட வேண்டும் சட்டங்களை திருத்தும் அரசுகளும் செயல்படவேண்டும். எனது குரலும் தொடர்ந்து ஒலிக்கும்.

காமராஜர் அவர்கள் இந்த அரிய சாதனையை செய்திடுவதற்கு மிக முக்கியமான காரணம் கல்வி மாநில அளவில் கல்வி இருந்ததே மிக முக்கியமான காரணம். இந்திய நாடு பன்முகத்தன்மை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த நாடு நாம் அனைவரும் சேர்ந்து கண்ட கனவு என கமலஹாசன் தெரிவித்தார்.

click me!