
ஊடகத்தினர் நச்சரிக்கிறார்கள் என்ற காரணத்தால் எல்லாம், அதற்கு அடிபணிந்து, கட்சியின் பெயர் எல்லாம் அறிவிக்க முடியாது... என்று விரக்தியிலும் கோபத்திலும் சொல்லியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
அண்மைக் காலமாக அரசியல் கருத்துகளைப் பேசி வருவதால், கமல்ஹாசன் எப்போது அரசியலுக்கு வருவார், தனிக்கட்சி தொடங்குவாரா, ஏதாவது அரசியல் கட்சியில் சேருவாரா... என்றெல்லாம் செய்திகளைத் தொகுத்து வழங்கி வருகின்றன ஊடகங்கள். எப்போது கட்சி தொடங்குவார், கட்சியின் பெயர் என்ன, கட்சிக்கு என்ன சின்னம், தனது பிறந்த நாளில் கமல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்றெல்லாம் கூறி, அதற்கு நவம்பர் 7ம் தேதி முடிவு கிடைக்கும் என்றெல்லாம் தகவல்களை வெளியிட்டு வந்தன ஊடகங்கள்.
இப்போது இதற்கான பதிலை அளித்துள்ளார் கமலஹாசன். தான் கட்சி தொடங்குவது அல்லது அரசியலுக்கு வருவதே ஏதோ ஊடகத்தினரின் உந்துதலால் தான் என்பது போல் இப்போது கருத்து தெரிவித்திருக்கிறார்.
பல வருட காலமாக தன் பிறந்த தினத்தில் இயக்கத்தினர் கூடுவார்கள் என்றும், அப்போது நான் பொது அறிவிப்புகளை வெளியிடுவேன் என்றும் கூறியுள்ள கமல் ஹாசன், தான் அரசியலுக்கு வருவது பொது அறிவிப்பா இல்லையா, தான் கட்சி தொடங்குவது பொது அறிவிப்பா இல்லையா என்பதையெல்லாம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், கமல் அரசியல் கட்சியின் பெயரை தன் பிறந்த நாள் அன்று அறிவிப்பார் என்று மட்டும் ஊடகங்கள் சொல்லிக் கொண்டு வருவதால், அதையும் புறந்தள்ளியுள்ளார் கமல் ஹாசன்.
ஊடகத்தினரின் நெருக்கடிக்காக நான் கட்சியின் பெயரை அறிவிக்க முடியாது என்று கூறி அவர் போட்ட டிவிட்டர் பதிவு....