’நாற்பதும் நமதே’... பாண்டிச்சேரியிலும் கட்சியைத் துவக்கினார் கமல்...

Published : Jan 30, 2019, 12:37 PM IST
’நாற்பதும் நமதே’... பாண்டிச்சேரியிலும் கட்சியைத் துவக்கினார் கமல்...

சுருக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி ஓராண்டு நிறைவுபெற உள்ள நிலையில், இன்று பாண்டிச்சேரியிலும் தனது கட்சியைத் துவங்கினார் அதன் தலைவர் கமல்ஹாசன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி துவங்கப்பட்ட ம.நீ.ம.வுக்கு இதுவரை பாண்டிச்சேரியில் கிளைகள் இல்லாமல் இருந்தது.

முன்னதாக கடலூரில் தனியார் பள்ளி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கமல்,’’அகிம்சை என்பதுதான் வீரத்தின் உச்சக்கட்டம். ரவுடிகளைக் கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தவில்லை. அகிம்சை வழியே இயங்கி வருபவர்கள் நாங்கள். எங்கள் கட்சியில் ரவுடிகளுக்கு மட்டுமல்ல, மாமூலான அரசியல்வாதிகளுக்கும் கூட இடம் தருவதாக இல்லை.

குறுகிய காலத்தில் மக்கள் நீதி மய்யம் புரட்சியைச் செய்யும். மக்களிடம் இருந்து முறையாகத்தான் நிதி பெறுகிறோம். மகனிடம் இருந்து தந்தை நிதி பெறுவதில் தவறேதுமில்லை.

நாடாளுமன்றத்தில், காந்தியைத் தேடவேண்டாம். அதற்கு வெளியே காந்தியைத் தேடினால் கிடைப்பார். காமராஜரும் கக்கனும் வடமாநிலங்களில் கிடைக்கமாட்டார்கள்.’ என்றார். பாண்டிச்சேரியிலும் கட்சி துவங்கியதை ஒட்டி நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிடுவதாக இருந்த மக்கள் நீதி மய்யம் இனி 40 தொகுதிகளில் போட்டியிடும்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!