மக்களவை தேர்தலுக்கு தயாரான அதிமுக.... அதிரடி அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jan 30, 2019, 12:36 PM IST
Highlights

மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவர்கள் பிப்ரவரி 4ம் தேதி முதல் விருப்ப மனுக்களை  பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவர்கள் பிப்ரவரி 4ம் தேதி முதல் விருப்ப மனுக்களை  பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில், மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக தலைமைக் கழகத்தில் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்னும் கூட்டணியே முடிவாகவில்லை. அதிமுகவில் கோஷ்டி மோதலும் அதிகரித்து வரும் நிலையில் விருப்பமனு அறிவிப்பை அதிமுக அறிவித்துள்ளது. 

click me!