மத்திய அரசை திருடன் என விமர்சித்த கமல்ஹாசன் பாடல்..?? காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

Published : May 12, 2022, 06:29 PM IST
மத்திய அரசை திருடன் என விமர்சித்த கமல்ஹாசன் பாடல்..?? காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

சுருக்கம்

மத்திய அரசை கடுமையாக விமர்சித்து  விக்ரம் பட பாடல் அமைந்திருப்பதாக பாடலை எழுதி பாடிய நடிகர் கமலஹாசன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசை கடுமையாக விமர்சித்து  விக்ரம் பட பாடல் அமைந்திருப்பதாக பாடலை எழுதி பாடிய நடிகர் கமலஹாசன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பத்தலே பத்தலே என்ற பாடல் ட்ரெண்டிங் ஆகி வரும் நிலையில் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ஜூன் 3ஆம் தேதி விக்ரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் கமலஹாசன் எழுதியது பாடியுள்ள பத்தலே பத்தலே பாடல் நேற்று வெளியானது. இப்பாடலில் அமைந்துள்ள வரிகள் மத்திய அரசை திருடன் என்று கூறும் வகையிலும் உள்ளது. அதே போல வடசென்னை வாசிகளை இழிவுபடுத்தும் வகையிலும், சாதி ரீதியான பிரச்சினைகளை தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் காவல் ஆணையருக்கு இணையதளம் வாயிலாக நடிகர் கமலஹாசன் மீது புகார் கொடுத்துள்ளார்.

கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே...
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே..

சர்ச்சைக்குரிய வரிகளை நீக்குவதுடன் பாடலை எழுதி பாடியுள்ள மக்கள் நீதி மையம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர்நீதி மன்றத்தில் விக்ரம் படத்தை தடை செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல இப்படத்தில் பிளேடு பக்கிரி என்ற வரி இடம்பெற்றுள்ளது இது வட சென்னை வாசிகளை ரவுடிகளை போல சித்தரிக்கும் வகையில் இருப்பதாகவும் வடசென்னை சேரி மக்களை இழிவுபடுத்தும்வகை வகையில் இந்த வரிகள் எழுதப்பட்டு இருப்பதாகவும் பலரும் விமர்சிக்கின்றனர். யாரோ ஒரு அரசியல் முதிர்ச்சி இல்லாதவர் இப்படி எழுதினால் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் முற்போக்கு சிந்தனையாளர் என்று தன்னைக் கூறிக் கொண்டு அரசியல் கட்சி நடத்தி வரும் கமலஹாசன் இப்படி எழுதலாமா? பாடலாமா என்றும் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இது ஒருபுறமிருக்க  மத்திய அரசை விமர்சித்து இடம்பெற்றுள்ள வரிகளை குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி சகலகலாவல்லவன், மார்க்கண்டேயன் கமல் வானதி  அம்மையாரிடம் தோற்ற மொத்தத்தையும் லிரிக்ஸ் இல் இறக்கியிருக்கிறார் போல, ஒன்றியம்ங்குற ஒற்றை வார்த்தையில் தன் மொத்த அரசியலையும் சுருக்கி டாப்ல, கூட்டணி அரசியல் இல்லனாலும் படக்காட்சிகளில் வந்துருச்சு என்று பதிவு செய்துள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!