
இன்று சென்னையை அடுத்த சென்னை கிறிஸ்தவ கல்லூரி 42 ஆம் ஆண்டு கல்லூரி விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உலக நாயகனும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், நான் கிறிஸ்தவ கல்லூரி விழாவில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இங்கு அறிவுரை கூற வரவில்லை. நான் என்னுடைய அனுபவத்தை தெரிவிக்க வந்துள்ளேன். அதிக நேரம் பேசுவதை விட, உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்புகிறேன்.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
நான் வந்தது எனக்கு திறமை இருக்கிறது என்று நீங்கள் நினைப்பதால்தான் இங்கு உள்ளேன். நான் என்ன செய்ய வேண்டும் என நினைத்து என் பெற்றோர் செயல்படவில்லை. அதனால் தான் இங்கு நிற்கிறேன். என்னை போல் நீங்கள் சிந்திக்க வேண்டாம். நம் இந்திய மக்களின் சராசரி வயது 29 ஆகும். ஆனால் பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் சராசரி வயது 54 ஆகும். இதனை நாம் கலைய வேண்டும்.
மாணவர்கள் வாக்களிக்க வர வேண்டும். அரசியல் உங்களை வழிநடத்தக் கூடாது. நீங்கள் அரசியலை வழி நடத்த வேண்டும். 100 சதவீதம் மாணவர்கள் வாக்களித்தால் அவர்களை நான் தோளில் தூக்குவேன். ஓட்டு எனக்கு போடுங்க என்று நான் கேட்க வரவில்லை. கண்ணாடியை பார்க்க வேண்டும், உங்களை நீங்கள் நேசியுங்கள். உங்கள் குணாதிசயங்களை நேசியுங்கள். தோல்வி, சோதனை வரும் என பயம் என்றால் சிறிது நேரம் தூங்கி விடுவேன்.
போருக்கு செல்வதற்கு முன்பு தூங்கி அதன் பிறகு கிளம்பி செல்வேன். ஒரு மொழி புரிந்து விட்டால் அம்மொழியினரையும் புரிந்து கொள்ளலாம். சினிமாவில் இயக்குனராகவே பணியாற்ற வந்தேன். அதனை மடை மாற்றி விட்டவர் இயக்குநர் கே.பாலசந்தர் அவர்கள். எனக்கு சினிமாவுக்கு அடுத்தது அரசியல் நன்றாக தெரிந்து இருக்க வேண்டும் என எண்ணுகிறேன் என்று உரையாற்றினார்.
இதையும் படிங்க..எடப்பாடி அண்ணே நீங்கதான் பொதுச்செயலாளர்!.. கைவிட்ட பாஜக.. காலியாகும் ஓபிஎஸ் கூடாரம் - தர்மயுத்தம் 2.0 ரெடி
இதையும் படிங்க..ஸ்மார்ட் வாட்ச் முதல் குத்து விளக்கு வரை.. வீடு தேடி வரும் பரிசுகள்! ஈரோடு கிழக்கு தொகுதி பரிசு பொருள் லிஸ்ட்!