பிறந்தவுடன் தாத்தாவாகத் துடிக்கும் குழந்தை... நடுக்கத்தில் கமல் ஹாசன்...!

Published : Apr 16, 2019, 12:49 PM IST
பிறந்தவுடன் தாத்தாவாகத் துடிக்கும் குழந்தை... நடுக்கத்தில் கமல் ஹாசன்...!

சுருக்கம்

கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த கமல் தேர்தல் நெருங்கி வருவதால் பெரும் கலக்கத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த கமல் தேர்தல் நெருங்கி வருவதால் பெரும் கலக்கத்தில் உள்ளார்.

அரசியலில் தவழும் குழந்தையான மக்கள் நீதி மய்யம் கட்சி இந்தத் தேர்தலில் தாத்தாவாகத் துடிக்கிறது. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கோடீஸ்வர வேட்பாளர்களையே நிறுத்தி இருக்கிறார் கமல். இந்தத் தேர்தல் கமலின் அரசியல் பயணத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக இருக்கும். அவரது சக்தி என்ன? மக்களிடம் உள்ள செல்வாக்கு என்ன? அவரது அரசியல் போக்குகளை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? என்பதற்கெல்லாம் விடை தெரிந்து விடும்.

ஆகையால், தேர்தல் நெருங்க நெருங்க பதற்றமாக இருக்கிறார் கமல். தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறி பேசி வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல். ’’தேர்தலில் வெற்றி இப்போது முக்கியமில்ல. ஆனால், டெபாசிட் போய் விடக் கூடாது.

அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்’’ என்று சொல்லிவிட்டாராம். இதற்காக பிரசார வீடியோ, ஆடியோ பிரசாரங்களில் தீவிரமாக இறங்கி உள்ளார். இதற்காக பிரபல முகங்களை இறக்கியும் அவர் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அவருக்கு ரிப்போர்ட் அளித்த தனியார் நிறுவனம் மூலம் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இதனால் நடுக்கத்தில் இருக்கிறார் கமல். மய்யம் கட்சி மாயம் ஆகாமல் இருந்தால் சரி..! 
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!