டி.டி.வி.தினகரனை வரவேற்க காருக்கு முன்னால் அசராமல் ஓடிவரும் அதிமுக எம்எல்ஏ !!

Published : Apr 16, 2019, 12:33 PM ISTUpdated : Apr 18, 2019, 10:38 AM IST
டி.டி.வி.தினகரனை வரவேற்க காருக்கு முன்னால் அசராமல் ஓடிவரும் அதிமுக எம்எல்ஏ !!

சுருக்கம்

கள்ளக்குறிச்சிக்கு வந்த அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை வரவேற்க அந்த தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரவு காருக்குப் முன்னால் தலைதெறிக்க ஓடி வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்த விதத்தை பார்த்து, டிடிவி தினகரனே மெய் சிலிர்த்து போனாராம். இந்த காட்சியைப் பார்த்த மக்கள், அவர் மிகச்சிறந்த விசுவாசி எனவும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அதிமுகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியபோது அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் அதிமுகவை வழி நடத்த டிடிவி தினகரனாலும், சசிகலாவினால் மட்டுமே முடியும் என்று கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு கூறி தனது முழு ஆதரவு தினகரனுக்குத் தான் என அறிவித்தார்.

கடந்த ஆண்டு பிரபு  பெசன்ட் நகரில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்று அவருக்கு பூங்கொத்து கொடுத்து தனது ஆதரவை தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரான பிரபு திடீரென தினகரனை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆனால் தனது தொகுதியில்  மக்களுக்கு சேவை செய்ய அதிகம் முட்டுக்கட்டை போடுகின்றனர். அதன் காரணமாகவே தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தேன் எனவும் பிரவு கூறினார்.  இதைத் தொடர்ந்து அவர் முழு நேர டிடிவி ஆதரவாளராக அவர் மாறிப்போனர்.

இதையடுத்து அவர் 18 எம்எல்ஏக்களைப் போன்று தகுதி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வந்த டி.டி.வி.தினகரனை பிரபு எம்எல்ஏ வரவேற்றார்.

தினகரனின் காருக்குப் முன்னால் தலைதெறிக்க ஓடி வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்த விதத்தை பார்த்து, டிடிவி தினகரனே மெய் சிலிர்த்து போனாராம். இந்த காட்சியைப் பார்த்த மக்கள், அவர் மிகச்சிறந்த விசுவாசி எனவும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். 

பிரபு  நினைத்திருந்தால் பலகோடிகளை வாங்கி கொண்டு எடப்பாடி பக்கம் சாய்ந்து இருந்துருக்கலாம்.. ஆனால் டிடிவி,தினகரனுடன் தொடர்ந்து பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!