கள்ளக்காதலனுக்காக 20 லட்சம் கடன் வாங்கி செலவளித்த மனைவி... துடிக்கத் துடிக்க போட்டுத்தள்ளிய போலீஸ் கணவர்..!

Published : Apr 16, 2019, 12:10 PM IST
கள்ளக்காதலனுக்காக   20 லட்சம் கடன் வாங்கி  செலவளித்த மனைவி... துடிக்கத் துடிக்க போட்டுத்தள்ளிய போலீஸ் கணவர்..!

சுருக்கம்

20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கள்ளக்காதலனுக்கு செலவு செய்ததால் செய்ததால் ஆத்திரத்தில் போலீஸ்காரர் தனது மனைவியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.   

20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கள்ளக்காதலனுக்கு செலவு செய்ததால் செய்ததால் ஆத்திரத்தில் போலீஸ்காரர் தனது மனைவியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னை, செம்பியம் காவலர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் பிரேம்நாதன். இவர், கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அர்ச்சனா. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் - மனைவி இடையே கடந்த சில மாதங்களாக சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுள்ளது. சண்டை முற்றி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த பிரேம்நாதன், வீட்டில் இருந்த இரும்பு  கம்பியால் அர்ச்சனாவை அடித்துக் கொன்றார்.

ரத்தவெள்ளத்தில் மிதந்த அர்ச்சனாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்நாதனை கைது செய்தனர். அப்போது பிரேம்நாதன் அளித்த வாக்குமூலத்தில் ‘’மனைவி அர்ச்சனாவுக்கும், ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இது எனக்கு தெரியவந்ததால் அவரை கண்டித்தேன். 

ஆனாலும், என் பேச்சை கேட்காமல் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்தார். உறவினர்களிடம் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கி அந்த வாலிபருக்கு செலவு செய்துள்ளார். இதனால் மனைவியை கண்டித்தேன். இதன்காரணமாக எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த இரும்பு  கம்பியை எடுத்து மனைவியை அடித்து கொன்று விட்டேன்’’ என அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அர்ச்சனாவின் கள்ளக்காதலன் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர். 

PREV
click me!

Recommended Stories

நாளை நடக்கப்போகும் மாபெரும் சம்பவம்.. உலகமே வியக்கப்போகும் இந்தியா..!
விஜய் போட்டு வைத்த மெகா ப்ளான்..! மோப்பம் பிடித்த அமித் ஷா..! தவெகவுக்கு இனி ஒரே ஆப்ஷன்தான்..!