
நடிகர் சங்கம்…. திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்… என அடுத்தடுத்து தனது வெற்றி முத்திரையைப் பதித்த நடிகர் விஷால் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் பொது வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். தனது ரசிகர்கள் புடைசூழ விஷால் வலம் வந்த போது அந்த கும்பலுக்கு கமல் ரசிகர்களும் இருந்ததாக தெரிவிக்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி, பாஜக, தீபா, என ஒரு பெருங்கூட்டமே களம் இறங்கியிருக்கிறது.
அந்த கூட்டத்தில் சுயேச்சையாக களமிறங்கிவிட்டார் நடிகர் விஷால். தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய சென்ற அவர், நடிகர் ஆரி பைக்கை ஓட்ட... பின்னால்அமர்ந்தபடியே ஆர்.கே.நகரை நோக்கிப் பயணித்தார்
விஷால். ஆர்.கே.நகர் வரை விஷால் ரசிகர்கள் பைக்கில் அவரைப் பின்தொடர்ந்து வந்தார்கள். விஷால் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, விஷால் ரசிகர்கள் தவிர,கமல் ரசிகர்களையும் அங்கே பார்க்க முடிந்தது. விஷாலுக்கு ஆதரவாகக் கமல் ரசிகர்கள் சத்தமில்லாமல் ஆர்.கே.நகரில் களமிறங்கிவிட்டார்கள் என்றே கூறப்படுகிறது
நடிகர் விஷாலை ஆர்.கே.நகரில் போட்டியிடச் சொன்னதே கமல்தான் தான் என்றும், புதுக்கட்சி தொடங்கும் திட்டத்தில் இருக்கும் கமல், நேரடியாக இப்போது களத்தில்இறங்க வேண்டாம் என யோசிக்கிறார் உன்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர்களுக்கு மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கும் என பல்ஸ் பார்க்க நினைத்த கமலஹாசன், இது தொடர்பாக விஷாலை அழைத்து பேசியதாகவும், ‘ஒரு கட்சிதொடங்குவது என்பது மிகப்பொரிய விஷயம் என்பதால் இது குறித்து முடிவெடுக்க சில டெஸ்டுகள் தேவை என்றும் தெரிவித்த கமல், இடைத் தேர்தலில் நீங்கநில்லுங்க. என்னோட ரசிகர்கள் உங்களுக்காக வேலை பார்ப்பாங்க என்று தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெற்றி , தோல்வி என்பது குறித்து தற்போது கவலை இல்லை என்றும், தனக்கு செல்வாக்கு இருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்கவே இந்த டெஸ்ட் என்றும் கமல் கூறியிருக்கிறார்.
என்னோட ஆளாக ஒருத்தரை அடையாளப்படுத்தி அங்கே நிற்க வெச்சாலும் அதுக்கு ஃபேஸ் வேல்யூ இருக்காது. நானே நிற்கலாம்... ஆனால், தோத்துட்டா இதுவரைக்கும்பேசினது எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நீங்க நில்லுங்க நான் உங்களுக்கு ஆதரவு தருகிறேன் என்று கூறியதாக தெரிகிறது.
முதலில் சற்று தயக்கம் காட்டிய விஷால் இப்போ நீங்க எந்த அரசியல் சாயத்துடனும் களமிறங்கவில்லை.
சுயேச்சை வேட்பாளராகத்தான் போட்டியிடப் போறீங்க. அதனால கேரியர்ல எந்த சிக்கலும் வராது...’ என்றெல்லாம் பேசி சமாதானம் செய்திருக்கிறார்.
இந்த உறுதிமொழிகளுக்கு அப்புறம்தான் தற்போது விஷால் தெம்பாக ஆர்.கே.நகரில் களம் இறங்கியுள்ளார். இப்ப தெரியுதா ? ஆள் வைத்து ஆழம் பார்க்கிறார் ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்பது !!!