உண்டியல் தூக்கிய கமல்: ஆளுங்கட்சி ஃபார்ச்சூனர் கார்.! எதிர்க்கட்சி என்ஃபீல்டு புல்லட், பா.ம.க. தங்க மோதிரம்..!

Published : Feb 05, 2022, 06:41 AM IST
உண்டியல் தூக்கிய கமல்: ஆளுங்கட்சி ஃபார்ச்சூனர் கார்.! எதிர்க்கட்சி என்ஃபீல்டு புல்லட், பா.ம.க. தங்க மோதிரம்..!

சுருக்கம்

நல்ல வேளை ஜல்லிக்கட்டு மாதிரி அண்டா, குண்டா, நாற்காலின்னு சொல்லாம போனாய்ங்க!

கமல்ஹாசன் தன் கட்சிக்கு தேர்தல் நிதி கேட்டு மக்களிடம் கோரிக்கை வைப்பதை அவரது கட்சி நிர்வாகிகள் விரும்பவில்லை என்பதை நமது ஏஸியாநெட் தமிழ் இணையதளம்தான் முதலில் வெளிப்படுத்தியது. தனது மூவ் தன் கட்சியினருக்கு அதிருப்தியை தந்துள்ளது என்பதை கமல்ஹாசன் ஏற்காவிட்டாலும் அதுதான் உண்மை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதுமட்டுமல்ல கமல்ஹாசன் இப்படி தேர்தலுக்கு நிதி கேட்டு, அதிலும் ஹைடெக்காக இன்டர்நெட் வழியே வந்திருப்பதை ‘ஆன்லைன் உண்டியல்’ என்று கிண்டல் செய்கின்றனர் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்.

இப்படி ‘ஆன்லைன் உண்டியல்’ என்று கமல் நக்கலடிக்கப்படுவதை சுட்டிக்காட்டும் அரசியல் பார்வையாளர்கள் “சினிமா மற்றும் டி.வி. ஷோக்கள் மூலமாக கமல் மிக கணிசமாக பணம் ஈட்டிக் கொண்டிருக்கிறார், ஆனாலும் அவர் இப்படி நிதி கேட்டு கட்சியின் மானத்தை அடகு வைக்க வேண்டுமா? என்பதே அவரது கட்சியினரின் மனக்குறையாக உள்ளது. அல்லது, அபரிமிதமாக சம்பாதிப்பதாலும், அவரது கட்சிக்கு சில ஸ்பான்சர் செய்கிறார்கள் எனும் விமர்சனம் இருப்பதாலும் பிற்காலத்தில் ‘ரெய்டு’ போன்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இப்படி மக்களிடம் நிதிதிரட்டல் எனும் ஐடியாவை கமல் தனது நிதி ஆலோசகர்கள் மூலமாக எடுத்துள்ளாரோ என தெரியவில்லை என்கிறார்கள்.

வரி கட்டுவதில் நேர்மையானவராக தன்னை அவர் கூறிக் கொள்வது வழக்கம், அது பொய் என்றும் இதுவரையில் எந்த சர்ச்சையும் வந்ததில்லை. ஆனால் அரசியல் கட்சி என்று துவங்கியதால், பல கோடி நிதிகள் வருவதும் போவதுமாக இருக்கையில் பிற்காலத்தில் எந்த சிக்கலிலும் சிக்கி, தன் பெயர் அசிங்கப்படாமல் இருக்க வேண்டும் என யோசிக்கிறாரோ என்னவோ என்று மக்கள் நீதி மய்யத்தினரே பேசுவதை கேட்க முடிகிறது.

எது எப்படியோ, கமல்ஹாசன் இப்படி நிதி கேட்டு நிற்க, மற்ற கட்சிகளோ தங்கள் நிர்வாகிகளுக்கு கெத்தாக பரிசுகளை அள்ளித்தரும் திட்டத்தை அறிவித்துள்ளன. அதாவது, உள்ளாட்சி தேர்தல் தி.மு.க. அணி, அ.தி.மு.க., பா.ஜ.க. என மும்முனை போட்டியாக மாறியுள்ளது. இதனால் வாக்குகள் பிரிவதென்பது உறுதியாகியுள்ளது. எனவே சின்னச் சின்ன மார்ஜினில்தான் பல இடங்களில் வெற்றிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி வெற்றி பெற வேண்டுமென்றால் மிக கடுமையாக தேர்தல் பணியாற்றினால் தான் முடியும்.

அப்படி தேர்தல் பணியாற்ற வேண்டிய பொறுப்பானது மாவட்ட செயலார்கள், துணை செயலாளர்களில் துவங்கி கிளை செயலாளர்கள் மற்றும் பூத் ஏஜெண்ட்கள் வரையில் இருக்கிறது. இவர்கள் கில்லியாக களமாடினால் வெற்றி நிச்சயமாகும். ஆக இவர்களை ஊக்குவிக்கும் பொருட்டுதான் பரிசுகளை தருவதாக அறிவித்துள்ளன கழகங்கள்.

தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் அசத்தலான வெற்றியை கட்சிக்கு அதிகமாக பெற்று தரும் மாவட்ட செயலாளர்களுக்கு ஃபார்ச்சூனர் எனும் மெகா காரினை பரிசளிப்பதாக தி.மு.க. ரகசியமாக அறிவித்துள்ளதாக அறிவாலய சோர்ஸ் கூறுகிறது. வெளிப்படையான உத்வேகப்படுத்தல், சின்னச்சின்ன பரிசுகளை சொல்லி உற்சாகப்படுத்தல் மட்டுமில்லாமல் உள்ளூர இப்படி மெகா ஆஃபர்களையும் அறிவித்துள்ளனர்.  இதற்கு அடுத்து சற்றே குறைந்த நிலையில் ஆனாலும் மிக சிறப்பான வெற்றியை குவிப்போருக்கு ஸ்கார்பியோ தருவதாகவும் அறிவித்துள்ளனராம். முப்பது, முப்பத்தைந்து லட்சம் மதிப்புள்ள கார்களை கட்சி பரிசாக தரும் வாய்ப்பை விட்டு வைக்கலாமா? என்று ஆளுங்கட்சி நிர்வாகிகள் வெறித்தனமாக களமாட துவங்கியுள்ளனர்.

அ.தி.மு.க.வும் சும்மா இருக்குமா? அக்கட்சியும் தன் மாவட்ட செயலாளர்களை உசுப்பேற்ற கார்கள் தருவதாக சொல்லியிருப்பதோடு ஒன்றியம் மற்றும் நகர செயலாளர்களுக்கு புல்லட்டுகள், விலை உயர்ந்த பைக்குகளை பரிசளிப்பதாகவும் சொல்லியுள்ளதாம் ரகசியமாக. ஆனால் பா.ம.க.வோ, அதிக வெற்றியை குவிக்கும் நிர்வாகிகளுக்கு அன்புமணி கையால் தங்க மோதிரம் வழங்கப்படும்! என்று சொல்லியுள்ளது.

நல்ல வேளை ஜல்லிக்கட்டு மாதிரி அண்டா, குண்டா, நாற்காலின்னு சொல்லாம போனாங்க!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!