பயங்கரவாதி முன் கேவலமாக மண்டியிட்டது மறந்து போச்சா கமல்..? ஹெச்.ராஜா சவுக்கடி..!

Published : May 13, 2019, 12:13 PM IST
பயங்கரவாதி முன் கேவலமாக மண்டியிட்டது மறந்து போச்சா கமல்..? ஹெச்.ராஜா சவுக்கடி..!

சுருக்கம்

விஸ்வரூபம் படத்திற்கு கமல்ஹாசன் பயங்ரவாதிகள் முன் கேவலம் பணத்திற்காக மண்டியிட்டதை மறக்க முடியவில்லை என ஹெச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். 

விஸ்வரூபம் படத்திற்கு கமல்ஹாசன் பயங்ரவாதிகள் முன் கேவலம் பணத்திற்காக மண்டியிட்டதை மறக்க முடியவில்லை என ஹெச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

'சுதந்திரம் அடைந்த பின்னர் முதன் முதலாக உருவான பயங்கரவாதி கோட்சேதான், இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து' என மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ’’அரவக்குறிச்சியில் பணக்கார முஸ்லிம் பெண்கள் மாலை 6 மணிக்குமேல் கடைகளுக்கு வருவார்கள் என்று மாலையில் இந்து ஆண்கள் கடைத்தெருவில் நடமாடக்கூடாது என்ற ஜமாஅத் உத்தரவை எதிர்த்து 1999ல் அரவக்குறிச்சியில் போராட்டம் நடத்தியவன் நான். ஆனால், ஓட்டுக்காக அங்கு சென்றுள்ள கமலுக்கு அது எப்படி தெரியும்.

 

கமலஹாசன் நான் தூக்கம் இழக்கும் அளவிற்கு பெரிய சக்தி அல்ல. இவரால் 1 சதவிகித வாக்குகள் கூட வாங்க முடியாது. ஆனால், விஸ்வரூபம் படத்திற்கு இவர் பயங்ரவாதிகள் முன் கேவலம் பணத்திற்காக மண்டியிட்டதை மறக்க முடியவில்லை. கமலஹாசனை அடையாளம் காண்போம். பல்லாயிரக்கணக்கான இந்துக்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு ரயிலில் இந்து உடல்களை ஜின்னா 1947 ஆகஸ்டு 15 அன்றே அனுப்பி வைத்ததும் நவகாளி சம்பவங்களும் இந்த ஜின்னாவின் பேரனுக்கு எப்படி நினைவிருக்கும். முஸ்லிம் ஓட்டுக்காக இப்படியா? வெட்கம்’’ என பதிலடி கொடுத்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!