அதையே ஏத்துக்க முடியல...! இதை எப்படி ஏத்துக்க முடியும்? போகிற போக்கில் அடித்துவிட்ட கமல்...!

 
Published : Mar 07, 2018, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
அதையே ஏத்துக்க முடியல...! இதை எப்படி ஏத்துக்க முடியும்? போகிற போக்கில் அடித்துவிட்ட கமல்...!

சுருக்கம்

kamal asked How can you do this

ஹெச்.ராஜா கருத்து குறித்து அவர் வருத்தம் தெரிவித்ததையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் கூறும் நொண்டி சாக்கை எப்படி ஏற்க முடியும் எனவும் மக்கள் நீதி மய்யத்தின் கமல் கேள்வி எழுப்பியுள்ளார். 

 பாஜக தொண்டர்கள் திரிபுராவில் அமைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றினர். லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப் போல், தமிழகத்தில் பெரியார் சிலைகள்  உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழகத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைந்து ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 

இதையடுத்து ஹெ.ராஜா அந்த பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார். ஆனாலும் கண்டனங்கள் வலுத்தன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, இதுகுறித்து தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளில் விளக்கம் தெரிவித்தார்.

பெரியார் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட கருத்து தன்னுடையது அல்ல எனவும் தனது அட்மின் எனக்கு தெரியாமல் செய்துவிட்டார் எனவும்  தெரிவித்தார். 

அவ்வாறு பதிவிட்ட அட்மினையும் அந்த பதிவையும் நீக்கிவிட்டதாக குறிப்பிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கமல், ஹெச்.ராஜா கருத்து குறித்து அவர் வருத்தம் தெரிவித்ததையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் கூறும் நொண்டி சாக்கை எப்படி ஏற்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!