"ஜெ"வின் முடிவில் தொடங்கிய "கமல்" - "ஆரம்பமானது புது அத்தியாயம்'

Asianet News Tamil  
Published : Sep 21, 2017, 06:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
"ஜெ"வின் முடிவில் தொடங்கிய "கமல்" - "ஆரம்பமானது புது அத்தியாயம்'

சுருக்கம்

kamal and araving gejrival met today and started new party

"ஜெ"வின் முடிவில் தொடங்கிய "கமல்" - "ஆரம்பமானது புது அத்தியாயம்'

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் செப்டெம்பர் 21 ஆம் தேதியன்று,அதாவது இதே நாள் (21/9/17) சென்னை விமானநிலையம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை  ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் துவங்கி வைத்தார்

விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி மற்றும் சின்னமலை ரயில் நிலையங்களுக்கு மெட்ரோ ரயில் சேவையை திறந்து  வைத்தார் ஜெயலலிதா

ஜெயலலிதா கலந்துக்கொண்டு பேசிய கடைசி நிகழ்வு இதுதான். இதற்கு அடுத்த நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அதன் பின்னர், 74  நாள் கழித்து அவருடைய சடலத்தை மட்டுமே பார்க்க முடிந்தது .

இன்றுடன் ஜெயலலிதா கலந்துக்கொண்ட கடைசி நிகழ்வு என்று கணக்கிட்டு பார்த்தால், இன்றுடன் ஒரு வருடம் முடிந்துவிட்டது.இந்த நாளை நினைவுகூர்ந்து, அவருடைய நினைவலைகளை பகிர்ந்து  வருகின்றனர் அவருடைய தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால் - கமல்  சந்திப்பு

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று கமலை அவருடைய வீட்டில் சந்தித்து  பேசினார். இருவரும் அரசியல் குறித்து தீவிர ஆலோசனை செய்தனர்.அதாவது, ஜெயலலிதா  கலந்துக்கொண்ட கடைசி  நிகழ்ச்சி நடைப்பெற்ற இதே நாளில், இவர்கள் இருவரும் சந்தித்து  அரசியல்அத்தியாயம் ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

திமுக கூட்டணிக்குள் பாமக ராமதாஸ்..? அது இப்போது முடியாது... போட்டுடைத்த விசிக வன்னி அரசு..!
அடியாட்களோடு திமுக செந்தில் வேல் ரௌடியிசம்..! 10 நிமிடம் கரண்ட் கட்.. குண்டர்களோடு பாஜகவினரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ..!