எடப்பாடியிடம் சரண்டர் ஆனாரா பிரபு ? முட்டி மோதிப்பார்க்க தயாரான தினகரன் !!

By Selvanayagam PFirst Published May 3, 2019, 9:35 PM IST
Highlights

அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதாக தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்களுக்கு  சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி பிரபு, எடப்பாடியிடம் சரண்டர் ஆகிவிட்டாக கூறப்படுகிறது. இதையடுத்து ரத்தின சபாபாதி மற்றும் கலைச் செல்வன் ஆகியோரை வைத்து வழக்கு நடத்த தினகரன் முடிவு செய்துள்ளார்.

நோட்டீஸ் அனுப்பட்ட 3 எம்எல்ஏக்களில் பிரபு தவிர இரு எம்.எல்.ஏ.கள் மட்டுமே தற்போது  உச்ச நீதிமன்றம் சென்று சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் மற்றொரு எம்எல்ஏவான பிரபு  மட்டும் சைலண்ட் ஆகிவிட்டார். ஏனென்றால் அமைச்சர் சி.வி. சண்முகம் மூலமாக கள்ளக்குறிச்சி பிரபு  எடப்பாடி பக்கம்  பக்கம் போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆலோசனை நடத்திய  தினகரன்,  அவருக்கு பணத்தைத் தாண்டி ஏதோ ஒரு பிரஷர் கொடுத்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக பேச பிரபுவை தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல், தினகரன் என மூன்று பேரும் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சபாறாகர் மீது திமுக கொண்டு வந்திருக்கும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்தும் தினகரன் தன்னுடை வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதையடுத்து உடனே உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்யப்பட்டது.

அதன்படியே அவசர அவசரமாக அபிடவிட் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அப்போதும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய இருவருக்கும் போன் செய்த தினகரன், ‘என்ன உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாமா. உங்களுக்கு சம்மதமா?’ என்று கேட்டிருக்கிறார். அவர்கள் முழு சம்மதம் தெரிவித்தபிறகு உடனடியாக அவர்கள் டெல்லி புறப்பட ஏற்பாடுகள் நடந்தன.

இதையடுத்து இரு எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இரு எம்.எல்.ஏ.க்களுக்காகவும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.  திமுக ஒத்துழைப்புடன் தான் இவ்வளவு சீக்கிரம் கபில் சிபலை ஃபிக்ஸ் செய்துகொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த மனு அவசர மனுவாக ஏற்கப்பட்டதும் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதும் நம்பிக்கை அளிப்பதாக தினகரன் தெரிவித்தார்.

click me!