மே 23 ஆம் தேதி திமுக, அமமுக நினைப்பது போல் எதுவும் நடக்காது !! சிரியாய் சிரிக்கும் ஜெயகுமார் !!

By Selvanayagam PFirst Published May 3, 2019, 7:47 PM IST
Highlights

மே 23-ம் தேதிக்கு பின் அமமுக, திமுக நினைத்தது எதுவுமே நடக்காது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  அம்மாவின் ஆட்சி தொடரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 

அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி அ.பிரபு, விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வருவதாக சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், 3 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இதன் தொடர்ச்சியாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில், சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ஜெயக்குமார், 3 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக நடக்கும்போது அவர்கள் மீதான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதத என தெரிவித்தார்.

மே 23-ம் தேதிக்கு பின் அமமுக, திமுக நினைத்தது எதுவுமே நடக்காது, என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  அம்மாவின் ஆட்சி தொடரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக தெரிவித்தார்.

அதிமுக என்ற பாண்டவர் அணியை சகுனி திமுகவும், துரியோதனன் அமமுகவும் சேர்ந்து ஏதும் செய்ய முடியாது. சகுனியான திமுக சூழ்ச்சி செய்யும். பாண்டவர்களான எங்களுக்கு சூழ்ச்சி செய்யத் தெரியாது. கட்சி , ஆட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடும்போது நடவடிக்கை என்பது தவிர்க்க முடியாதது. மே 23 ஆம் தேதிக்கு பிறகு திமுகவும் அமமுகவும் நினைப்பது நிறைவேறாது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

click me!