நான் இன்னும் சசிகலா அணியில் இருக்கிறேன், ஆனால்... கதிகலங்க விடும் கள்ளக்குறிச்சி பிரபு!!

By sathish kFirst Published May 5, 2019, 12:03 PM IST
Highlights

நான் சசிகலா அணியில்  இருக்கிறேன், தினகரனுடன் தொடர்பில்லை என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாகச் செயல்பட்டு வந்த அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி சபாநாயகரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து இம்மூவருக்கும் மே 2ஆம் தேதி சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் சென்று சேர்ந்திருக்கும் நிலையில் இவர்களில் கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோர் மட்டுமே உச்ச நீதிமன்றம் சென்றார்கள். பிரபு அவர்களுடன் செல்லவில்லை.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மூலம் பிரபு எம்.எல்.ஏ. அதிமுக கூடாரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். நோட்டிஸ் அனுப்பப்பட்ட மூன்றுபேரில் பிரபு மட்டும் உச்ச நீதிமன்றம் செல்லாமல் தனி ரூட் போட்டுள்ளார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இடைத் தேர்தல் பணி ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமமுக சார்பில் போடப்பட்டிருந்தது. இதை ஒட்டி மே 3ஆம் தேதி சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் முதல் விமானத்தில் புறப்பட்டு பிரபு தூத்துக்குடி சென்றார். அங்கே பிரபுவை அழைத்து செல்லத் தயாராக அமமுக கொடி கட்டப்பட்ட காரில் ஏறி ஹோட்டலுக்குப் புறப்பட்டார் பிரபு.

தூத்துக்குடியில் இருந்தபடி செய்தி சேனல்களுக்குப் பேட்டியளித்த பிரபு, நான் அதிமுகவில் சசிகலா பிரிவில் இருக்கிறேன். நான் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். அதிமுக என்பது சசிகலாவிடம்தான் உள்ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் சசிகலா சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், நான் வாக்களித்துதான் பழனிசாமி முதல்வரானார். அதிமுக ஆட்சிக்கு எதிராக நான் ஒரு நாளும் செயல்பட்டதில்லை. கொறடா உத்தரவை மட்டுமே நான் செயல்படுத்தி வருகிறேன். கட்சியில் பொறுப்பில் இல்லையேதவிர, அதிமுக உறுப்பினராகத் தான் இருந்து வருகிறேன் என்று தெரிவித்தார்.

click me!