நீட் , மரணங்களை மறைக்கவே கள்ளக் குறிச்சி சம்பவம்.. திட்டமிட்டே செய்ததா திமுக..?? அதிமுக இன்பதுரை பகீர் .

Published : Jul 20, 2022, 12:40 PM ISTUpdated : Jul 20, 2022, 12:53 PM IST
 நீட் , மரணங்களை மறைக்கவே கள்ளக் குறிச்சி சம்பவம்..  திட்டமிட்டே செய்ததா திமுக..?? அதிமுக இன்பதுரை பகீர் .

சுருக்கம்

நீட் தேர்வால் ஏற்படும் தொடர் மரணங்களை மறைக்க கள்ளக்குறிச்சி சம்பவத்தை திமுக திட்டமிட்டே நடத்தியிருக்கிறது என்ற ஐயம் தோன்றுகிறது என்றும் ஒரு செய்தியை மறைக்க இன்னொரு செய்தியை கிளப்பி விடுவது தான் திமுகவில் வேலை என்றும், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நீட் தேர்வால் ஏற்படும் தொடர் மரணங்களை மறைக்க கள்ளக்குறிச்சி சம்பவத்தை திமுக திட்டமிட்டே நடத்தியிருக்கிறது என்ற ஐயம் தோன்றுகிறது என்றும் ஒரு செய்தியை மறைக்க இன்னொரு செய்தியை கிளப்பி விடுவது தான் திமுகவில் வேலை என்றும், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில்  மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது ஒருபுறம் உள்ள நிலையில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. பின்னர் அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட கலவரம் அரசின் சட்டம் ஒழுங்கை கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக, பாஜக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை திமுக அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார், அப்போது அவர் பேசியதாவது, சமீபத்தில் நீட்தேர்வு முடிந்துள்ள நிலையில் இதுவரை தமிழகத்தில் 8 மாணவர்கள் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளனர். தேர்தல் நேரத்தின்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீர்த்தேவை ஒழிப்போம் என கூறினர். ஆனால் இந்தாண்டு நீட்தேர்வு நடந்துவிட்டது, அதை எவரும் கண்டுகொள்ளவில்லை, அதுமட்டுமின்றி அது தொடர்பான மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: CWG 2022: modi: மனஅழுத்தமின்றி விளையாடுங்கள்: காமென்வெல்த் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

நீட் மரணங்களை திசை திருப்பவும், மறைப்பதற்காகவும் கள்ளக்குறிச்சி கலவரத்தை திட்டமிட்டு திமுக நடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. இப்போது அனைவரும் கள்ளக்குறிச்சி விஷயத்தைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் மறுபுறம் அமைதியாக நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது, அது மட்டுமின்றி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீசார் இப்போது ஓடிஓடி கைது செய்கிறார்கள், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக காவல்துறை மிக சிறப்பாக செயல்பட்டு கலவரத்தை அடக்கிவிட்டது என இவர்களே பாராட்டி பேட்டி கொடுக்கிறார்கள், ஆனால் மறுநாளே மாவட்ட ஆட்சியர் முதல் எஸ்பிவரை இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறது, அவரது வீட்டை அளவீடு செய்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: மீண்டும் பரபரக்கும் குட்கா ஊழல் வழக்கு.. முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், ரமணாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சிபிஐ

அவரின் முன்னோர்கள் கட்டிய வீட்டை எதற்காக  அளவீடு செய்கிறார்கள்? குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் கொடுத்தது எதற்காக, அனைவரும் இதைப் பற்றியே பேச வேண்டும் மற்ற தவறுகளை மறந்து விட வேண்டும் என்பதற்காகத்தான். திமுக அரசு தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் எண்ணத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எப்போதும் ஒரு செய்தியை மறைக்க இன்னொரு செய்தியை கிளப்பி விடுவது தான் திமுகவின் வேற இவ்வாறு அவர் கூறினார்.

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!