காலா பாடல்களை அட்டாக் பண்ணும் அமைச்சர்….அமைதியை சீர் குலைத்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்….கடும் நடவடிக்கைதான்…

Asianet News Tamil  
Published : May 10, 2018, 09:08 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
காலா பாடல்களை அட்டாக் பண்ணும் அமைச்சர்….அமைதியை சீர் குலைத்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்….கடும் நடவடிக்கைதான்…

சுருக்கம்

Kala film songs minister jayakumar warning

காலா  திரைப்படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் கடுமையான சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் கருத்து தெரிவித்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததால், அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து அவர்களை கடுமையான அட்டாக் செய்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுக அமைச்சர்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சீண்டி  வருகின்றனர்.

அதிமுக.வை பொறுத்தவரை கமல்ஹாசனை மட்டுமே நேரடியாக டார்கெட் செய்து கொண்டிருக்கிறார்கள். காரணம், அவர் மட்டுமே அதிமுக அரசை காரசாரமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்காத காரணத்தால், விமர்சனங்களை அடக்கியே வாசிக்கிறார். எனவே அவரது ஆன்மீக அரசியலை விமர்சிக்கும் சில கட்சிகளைத் தவிர, முக்கிய கட்சிகள் ரஜினிகாந்த் பற்றி அதிகம் விமர்சிப்பதில்லை. ஆனால்  அமைச்சர் ஜெயகுமார்  திடீரென ரஜினிகாந்த்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

நேற்று ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் 9 பாடல்களை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் போராட்டத்தை வலியுறுத்தும் விதமான வரிகள் அதிகம் இருக்கின்றன.

இந்த பாடல்கள்  குறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது,  ‘காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது என கடுமையாக தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார் . ‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும்’ என்றார்

PREV
click me!

Recommended Stories

திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!
அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்.. தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்!