நான் எப்ப அரசியல் கட்சி தொடங்கப் போறேன் தெரியுமா ? ரஜினி அதிரடி அறிவிப்பு !!

Asianet News Tamil  
Published : May 10, 2018, 07:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
நான் எப்ப அரசியல் கட்சி தொடங்கப் போறேன் தெரியுமா ? ரஜினி அதிரடி அறிவிப்பு !!

சுருக்கம்

Rajini speake about his entrance of politics

நான் அரசியல் கட்சி தொடங்குவதற்கான  நேரம் விரைவில் வரும்…. அப்போது வருவேன். இன்னும் அந்த காலம் வரவில்லை. அந்த காலம் விரைவில் வரும். என்னை வாழ வைத்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்லது நடக்கும். என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள  காலா படத்தின் பாடல் வெளியீடு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ திறந்தவெளி மைதானத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது. இதில் ரஜினிகாந்த், இயக்குனர் பா ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ், விழா நாயகன் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்

இந்த விழாவை விஜய் டிவி புகழ் திவ்யா தர்ஷினி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகாக அமைக்கப்பட்ட மேடையில் காலாவில் ரஜினி பயன்படுத்தும் மஹிந்திரா தார் எஸ்யூவி வாகனம் முக்கிய அடையாளமாக நிறுத்தப்பட்டிருந்தது.

காலா படத்தில் கருப்பு வண்ணத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் பாடல் வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சி மேடை கருப்பு நிற வண்னத்தை முதன்மையாக வைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, காலா திரைப்படம், இயக்குநர் பா.ரஞ்சித். தயாரிப்பாளர் தனுஷ், தன்னுடைய படங்கள், செற்றி பெற்ற திரைப்படங்கள், தோல்வி அடைந்த படங்கள் என அனைத்து பிரச்சனைகளையும் பற்றி பேசினார்.

இறுதியாக அவர் பேசும்போது, படம் குறித்து மட்டும் பேசிக்கொண்டிருக்கிறேனே, பத்திரிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அரசியல் குறித்து எப்போது பேசப்போகிறேன் என எதிர் பார்ப்பது நன்றாக புரிகிறது என ரசிகர்களின் ஆராவாரத்துக்கிடையே தெரிவித்தார்.

என்ன பண்ணுறது எல்லாத்துக்கும் நேரம் இருக்கு... அந்த நேரம் விரைவில் வரும், அப்போது வருவேன். இன்னும் அந்த காலம் வரவில்லை. அந்த காலம் விரைவில் வரும். என்னை வாழ வைத்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்லது நடக்கும். என தெரிவித்தார். அப்போது தமிழகம் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

வழக்கம்போல் இந்த முறையும் ரஜினி ரசிகர்கள் அவர் கட்சியின் பெயர், தொடங்கப்போகும் தேதி போன்றவை குறித்து அறிவிப்பார் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் வழக்கம்போல் அவர் எதுவுமே அறிவிக்காமல் சொதப்பியது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!
அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்.. தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்!