காலமானார் காடுவெட்டி குரு… உடல்  நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் மரணம் !!

Asianet News Tamil  
Published : May 26, 2018, 03:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
காலமானார் காடுவெட்டி குரு… உடல்  நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் மரணம் !!

சுருக்கம்

Kaduvetti Guru expired in appolo hospital

நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் பாமக எம்எல்ஏவுமான காடு வெட்டி குரு மரணமடைந்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காடுவெட்டி குரு கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

காடுவெட்டி குரு அவர்களுக்கு சுவாச பிரச்சனை இருந்ததால் அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைக்குப்  பின்னர் அவரது உடல்நிலை தேறி வந்த நிலையில் திடீரென அவரது உடல்நிலை மோசமாகியது.

பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான டாக்டர் அன்புமணி தினமும் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று காடுவெட்டி குருவின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்து வந்தார்..

கடந்த ஓர் ஆண்டாக காடுவெட்டி குரு நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் காடுவெட்டி குரு இரவு காலமானார்.

குருவின் சொந்த ஊரான ஜெயங்கொண்டத்தையடுத்த காடுவெட்டிக்கு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் களத்தில் அதிரடி காட்டும் விஜய்..! 234 தொகுதிகளிலும் விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு
பதவி விலகுகிறேன்..! தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதில்லை.. அண்ணாமலை திடீர் அறிவிப்பு..!