அரசு பேருந்துக்கு தீவைப்பு… மீண்டும் பதட்ட நிலையை எட்டும் தூத்துக்குடி

First Published May 25, 2018, 5:45 PM IST
Highlights
government bus fired in thoothugudi


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென பல்வேறு தரப்பினர் அமைதியான முறையில் போராடி வந்தனர். இதன் 100 வது நாள் போராட்டத்தில் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் போலீஸார் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.இதனால் 13 பேர் பலியாகியுள்ளனர்.  

இச்செயல் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினரும் மக்களும் பல்வேறு வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதற்காக அரசு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது என அறிவித்தது. மேலும் அதனையொட்டி காலை முதல் தூத்துக்குடியிலிருந்து பிற ஊர்களுக்கு அரசு பேருந்து இயக்கபடவும் தொடங்கியது.  பிற ஊர்களிலிருந்து தூத்துகுடிக்கு பேருந்துகள் வரவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்த்து.

சென்னை போன்ற தொலைதூர பேருந்துகளும் இயக்க அரசு தீவிரம் காட்டி வந்த்து இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த பேருந்து உடன்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்தது. இதனால் மீண்டும் பதட்ட நிலையை எட்டுகிறது தூத்துக்குடி.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டிப்பதாக கூறியபடி தீ வைத்ததாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்

click me!