வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம தலைவரு ஏன் இப்டி பண்றாரு? கர்நாடக ரசிகர்கள் கதறல்ஸ்...

Asianet News Tamil  
Published : Jun 07, 2018, 03:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம தலைவரு ஏன் இப்டி பண்றாரு? கர்நாடக ரசிகர்கள் கதறல்ஸ்...

சுருக்கம்

Kaala Releases Amid Fan Frenzy No Show In Karnataka

ரஜினி நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் ரஜினியின்‘காலா’படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் சில கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த கர்நாடக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகப் பேசியதாக கூறி, ‘காலா’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்கின்றனர்.

ஆனால், கர்நாடகாவில் காலாவுக்கு எல்லா கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றே கள நிலவரம் தெரிவிக்கின்றது. ‘காலா’ படத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர உள்ளது. வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவாளி வாட்டாள் பக்‌ஷா, கர்நாடகா ரக்‌ஷானா வேதிகா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் ‘காலா’ படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து முறையிட்டது. ‘காலா’ தடைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“காலா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. வர்த்தக சங்கம்தான் இந்த முடிவை எடுத்தது” என்று  கர்நாடக திரைப்பட விநியோகஸ்தர்கள் அசோஷியேஷன் கூறுகிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் குமார் கூறுகையில், “முறையான காரணம் இல்லாமல் எந்தப் படத்திற்கும் நாங்கள் தடை கோருவதில்லை. இந்தப் படத்திற்கு யார்? எதற்காக தடை கோருகிறார்கள் என்று புரியவில்லை. விநியோகஸ்தர்களை சிலர் மிரட்டல் விடுத்திருக்கலாம் இருக்கலாம். முக்கியமான விஷயங்களை தவிர இதுபோன்ற பெரிய முடிவுகளை எந்த விநியோகஸ்தர்களும் எடுக்கமாட்டார்கள்” என பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டார்.

‘காலா’படத்திற்கான விநியோகஸ்தரும், கோல்டி பில்ம்ஸ் உறுப்பினருமான ஒருவர் கூறுகையில், “காலா படத்தை வெளியிட வேண்டாம் என சில கன்னட அமைப்புகள் வற்புறுத்துகின்றனர். மீறி திரையிட்டால் திரையரங்குகளை அடித்து நொறுக்குவோம் என்று மிரட்டுகிறார்கள். நாங்கள் ஏன் பிரச்னையை எங்கள் தலைமேல் போட்டுக் கொள்ள வேண்டும். அதனால் எங்களுக்கு தான் வணிகம் பாதிக்கப்படும். பணம் சம்பாதிக்கவே இந்தத் தொழிலை செய்கிறோம். சுமூகமான தீர்வு எட்டப்படும் வரை எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும். நாங்கள் எந்தவொரு தடையையும் கேட்கவில்லை” இந்த விநியோகஸ்தரும் கைவிரித்தார்.

‘காலா’தடைக்கு கர்நாடக கிரஹகாரா கூடா அமைப்பின் உறுப்பினரும், கன்னட ஆதரவாளருமான கணேஷ் சேட்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  ‘காலா’விவகாரம் குறித்து அவர் பேசுகையில், “தடை விதிக்க வாட்டாள் நாகராஜ் யார்? அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இந்த முடிவை எடுப்பதற்கு அரசின் எந்த அமைப்பிலாவது அவர்கள் இருக்கிறார்களா? எதுவுமே இல்லை. அப்படி இருக்கையில் அவர்கள் எப்படி படத்திற்கு தடை விதிக்க முடியும்? காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு எதிராக யாரும் செயல்பட முடியாது. அப்படி இருக்கையில், இந்தப் போராட்டத்திற்கு அர்த்தமே இல்லை. ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் தடையை ஆதரிக்கவில்லை” என அவரும் கைவிரித்தார்.

‘காலா’ படத்திற்கு எதிராக எவ்வித போராட்டத்தையும் அறிவிக்கவில்லை என்றும் அதனால் காவிரி பிரச்னையில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் கர்நாடகா ரக்‌ஷானா வேதிகா அமைப்பின் தலைவர் நாராயண கௌடா நேற்று கூறினார். ஆனால், கர்நாடகா ரக்‌ஷானா வேதிகா அமைப்பைச் சேர்ந்த சிலர் இன்று ‘காலா’படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினி தனது கருத்தினை வாபஸ் பெற்றால் போராட்டங்களை நிறுத்துவதை குறித்து ஆலோசிக்கப்படும் என  போரட்டகாரர்களும் ரஜினிக்கு எதிராகவே சொல்கிறார்கள்.

கர்நாடகாவில் ‘காலா’ திரையிட கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை விதித்தது. இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் கூறுகையில், “காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள்,  விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினி கூற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும்” என சொன்னது ஆனால் ரஜினியோ அப்படியல்லாம் சொல்லவில்லை,இப்படியிருக்கையில், காலா வெளியாகும் திரையரங்கிற்கு பாதுகாப்பு அளிக்க கேட்டதற்கு,  குமாரசாமி கூறுகையில், “காலாவுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

படத்தை திரையிட்டால் கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு. மாநிலத்தின் அமைதிக்காக ‘காலா’வை திரையிடாமல் இருப்பது தான் நல்லது. படத்தை வெளியிட்டால் அதன் விளைவுகளை படத்தின் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும்” என்றார்.  மேலும், “காலா படத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்ற கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. உத்தரவு நகல் கிடைத்த உடன் திரையரங்கங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று அவர் கூறினார்.  ஆனால் எவ்வளவு முயன்று கர்நாடகாவில் ரஜினிக்கு எதிராக காலா வெளியாகும்என சொல்லப்பட்ட திரையரங்குகளில் போராட்டக்காரர்கள் கோஷம் போதுவதால், இப்படம் வெளியாகவில்லை என தெரிகிறது.

இந்நிலையில்,கர்நாடக ரசிகர்களோ படம் வெளிநாடுகளில் நல்லா ஓடுகிறது. இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கு ஆதரவான கருத்தை சொன்னதால் தான் இப்படி செய்வதா ரசிகர்கள் புலம்புகின்றனர். மேலும், இவரு வாயை வச்சிக்கிட்டு சும்மா இல்லாம எதாவது கருத்து சொல்லி இப்படி நம்மள படம் பார்க்க முடியாமல் செஞ்சிட்டாரே என கதறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Breaking News: மஃப்டியில் வந்த அமைச்சர்.! ரூ.4,000 மாமூல் கேட்ட அர்ச்சகர்கள் - திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு.!