சிறுபான்மையினருக்கு எதிரான கருத்தை கூறியவருக்கு நீதிபதி பதவியா.? நீதித்துறை நம்பிக்கையை பாதித்துள்ளது-சிபிஎம்

Published : Feb 07, 2023, 07:59 AM IST
சிறுபான்மையினருக்கு எதிரான கருத்தை கூறியவருக்கு நீதிபதி பதவியா.? நீதித்துறை நம்பிக்கையை பாதித்துள்ளது-சிபிஎம்

சுருக்கம்

சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து கூறிய பாஜக நிர்வாகியான  வழக்கறிஞரான விக்டோரியா கெளரியை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விக்டோரியா கெளரி நீதிபதியாக நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பதவியிடங்களை நிரப்பும் வகையில், குடியரசு தலைவருக்கு கொலிஜியம் வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை பரிந்துரை செய்திருந்தது. அதில் வழக்கறிஞரான விக்டோரியா கெளரியும் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.  இதற்க்கு வழக்கறிசஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விக்டோரியாகெளரிபாஜக நிர்வாகியாக இருந்து கொண்டு இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான கருத்துகளை சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில்,  

எதிர்ப்பையும் மீறி பாஜக பெண் நிர்வாகிக்கு நீதிபதி பதவி...! அடுத்த நிமிடமே வழக்கறிஞர்கள் எடுத்த அதிரடி முடிவு

எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கறிஞர்கள்

இந்திய மக்களிடையே மத அடிப்படையில் வெறுப்பை மூட்டும் விதத்தில் கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கு எதிராக மோசமான பேச்சுக்களை பேசி வந்த பாஜக நிர்வாகி, விக்டோரியா கெளரி அவர்கள் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக  நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமயன நடவடிக்கை நீதித்துறையின் மீதான நம்பிக்கையை பாதித்துள்ளது.  நீதிபதியாக செயல்படுவோர் தனிப்பட்ட அரசியல் கருத்துக்களை கொண்டிருக்கலாம். ஆனால் அரசமைப்புச் சட்டத்திற்கே விரோதமாக வெறுப்பு பேச்சுக்களை பேசியவர், அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்களை காக்க  செயல்படுவாரா?

ரத்து செய்திடுக- கே.பாலகிருஷ்ணன்

கொலீஜியம் முடிவிற்கு எதிராக வழக்கறிஞர்களும், அரசியல் கட்சிகளும் கொந்தளித்தது நியாயமானது. தற்போத உச்ச நீதிமன்றம் இது பற்றிய வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆனால் இந்த நிலையில் பாஜக ஒன்றிய அரசு முந்திக்கொண்டு  நியமனத்தை‌ உறுதி செய்துள்ளது. எனவே, பிரச்சனையின் தீவிரத்தை கணக்கில் கொண்டு, உச்ச நீதிமன்றம் இந்த நியமனத்தை‌ ரத்துச் செய்து நீதித்துறையின் மாண்பினை பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தர்மத்திற்கு சோதனை வரலாம்! ஆனால் வீழ்ந்து விடாது! தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்! ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!