தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்..! அரசியல் சாசனத்திற்கு விரோதமானது- கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Jan 8, 2023, 8:15 AM IST

 ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 
 


முதல்வரை சந்தித்த பாலகிருஷ்ணன்

சென்னை  தலைமைச் செயலகத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி மனு அளித்தார். அந்த மனுவில்,  பொதுவுடமை இயக்கங்களின் முன்னோடியும், கியூபப் புரட்சியின் வெற்றிக்கு வித்திட்ட தோழர் பிடல் காஸ்ட்ரோ அவர்களுடன் இணைந்து போராடிய புரட்சியாளரும், உலகப் புகழ்பெற்ற மார்க்சிய சிந்தனையாளருமாகிய தோழர் சேகுவேரா அவர்களுடைய புதல்வியார் திருமதி அலெய்டா குவேராவும், அவரது மகள் பேராசிரியர் ஸ்டெஃபானி ஆகியோருக்கு சென்னையில் 18.1.2023 அன்று நடைபெறவுள்ள வரவேற்பு விழாவில் முதலமச்சர் கலந்து கொள்ள வேண்டும் வலியுறுத்தியாக தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

ரெட் ஜெயண்ட் பேர் சொல்ல பயமா? எங்க போச்சு சரக்கு! முறுக்கு! மிடுக்கு! தமிழக பாஜக அதிரடி !!

ஆளுநருக்கு எதிராக புகார்

மேலும் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாகவும், தஞ்சை - கடலூர் மாவட்டங்களில் செயல்படும் திருஆருரான், ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையிலிருந்து விவசாயிகளை   விடுவிக்க தமிழ்நாடு அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தியதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் திரு ஆர்.என். ரவி அவர்கள், தொடர்ந்து தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாகவும், பழமைவாத சனாதன கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கும் முரண்பாடாக பேசி வருவதாகவும், தமிழக ஆளுநராக இருந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிரான முறையில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியதாக தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் செயல்பாடு-மக்கள் கொந்தளிப்பு

புதிய கல்விக் கொள்கையை அமலாக்குவது, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க மறுப்பது, குறிப்பாக, நீட் விலக்கு, ஆன்லைன் ரம்மி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து கிடப்பில் போட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு பெயரை பயன்படுத்துவது தவறு என பேசியுள்ளது அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும். ஆளுநரின் இந்தப் போக்கை எதிர்த்து தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், ஜனநயாக இயக்கங்களும் கண்டன குரல் எழுப்பி வருகின்றன. அது குறித்த  தமிழக மக்களின் கொந்தளிப்பான எதிர்ப்பு உணர்வுகளை தெரியப்படுத்தியதாக கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஆளுநரை விமர்சிக்க திமுகவினருக்கு என்ன தகுதி உள்ளது.?ஆட்சியின் குளறுபடியை மறைக்க திசை திருப்ப முயற்சி- அண்ணாமலை

click me!