சும்மா நல்லவர்கள் மாதிரி நடிக்காதீங்க... திமுகவை வறுத்தெடுத்த சித்தி ராதிகா..!

Published : Apr 03, 2021, 09:50 AM ISTUpdated : Apr 03, 2021, 10:57 AM IST
சும்மா நல்லவர்கள் மாதிரி நடிக்காதீங்க... திமுகவை வறுத்தெடுத்த சித்தி ராதிகா..!

சுருக்கம்

மக்கள் மௌன புரட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். மாற்றம் வேண்டும் என முடிவெடுத்துவிட்டார்கள் என்று சமத்துவ மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.   

திருவண்ணாமலையில் மக்கள் நீதி மய்யம் - சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “எங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் மௌன புரட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். மாற்றம் வேண்டும் என முடிவெடுத்துவிட்டார்கள். தமிழகத்தில் ஏன் மாற்றம் இருக்கக் கூடாது?  அதிமுக என்பது தலைமையே இல்லாத ஒரு கட்சி. ஜெயலலிதாவின் செயல்பாட்டை மறந்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது தமிழர்களுக்குப் பிடிக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் கலைத்துறையினருக்கு இந்த அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை. திமுகவினர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். திமுகவினர் தங்களை நல்லவர்கள் போல் போர்வையைப் போர்த்திக்கொண்டு சித்தரிக்கிறார்கள். அக்கட்சியின் தலைமையில் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை இல்லை. திமுகவில் நகைச்சுவை பேச்சாளர்கள் தொடங்கி பட்டிமன்ற பேச்சாளர்கள் என அனைவருமே பெண்களை தரக்குறைவாக பேசுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்கிறார்கள். ஜெயலலிதா இருந்தவரை பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. இப்போது அப்படி இல்லை. தமிழகத்தில் பாஜக மீது பெரிய அளவிற்கு பற்றோ பிடிப்போ இல்லை.” என்று ராதிகா தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Udhayanidhi vs CM Vijay: சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!
TN Politics: திமுக-அதிமுக கூட்டணி பேச்சு.. பின்னணியில் அவரா? திருமாவளவன் சொன்ன ஷாக் நியூஸ்!