
அரசியல் கட்சி தொடங்கப்போவதாக சில தினங்களுக்கு மூலம் ஜூலி, சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடுத்திருந்த நிலையில், கமல் கட்சியில் சேரப்போவதாகவும், தனிக்கட்சி தொடங்கும் அளவுக்கு ரிஸ்க் எடுக்க மாட்டார் செய்திகள் வெளியாகி உள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டக்காரராக அறியப்பட்டு, பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஜூலி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பிரபலங்களுக்கு இருந்த வரவேற்பை விட, ஜூலிக்குத்தான் அதிகம் வரவேற்பு இருந்தது. ஆனால் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத ஜூலி, சில தில்லு முள்ளு வேலைகள் மற்றும் பொய் பேசியதால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். இதன் காரணமாக ரசிகர்களின் ஆதரவு கிடைக்காமல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
வெறும் ஜூலியாக வெளியே வந்த அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை என அவதாரம் எடுத்து வருகிறார். இதெல்லாம் அவருடைய இஷ்டம் என பொதுமக்கள் பொறுத்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் தற்போது... ரஜினி, கமல் எல்லாம் வேஸ்ட், நான் தான் அரசியலுக்கு பெஸ்ட் என கூறி அரசியல் கட்சி தொடங்க போறேன் என சமூக வலைத்தளம் மூலம் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதைக் கேட்டதுமே நெட்டிசன்கள் பலர் ஜூலியை கழுவி கழுவி ஊத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவை ஆட்டி படைத்து வரும் இரு ஜாம்பவான்களே, அரசியலில் தன்னுடைய அடிகளை மிகவும் கவனமாக எடுத்து வைக்கும் நிலையில், ஒரே வருடத்தில் அதும் நெகடிவ் இமேஜ் மூலம் அறியப்பட்ட இவர் அரசியல் களத்தில் எந்த நம்பிக்கையில் வருகிறார்? பின்னணியில் யார் யார் உள்ளனர்? என்பது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜூலிக்கு அரசியல் ஆசை இருக்கிறது. ஆனால், தனிக்கட்சி தொடங்கும் அளவுக்கு அவர் இறங்க மாட்டார் என்றும், மக்கள் நீதி மய்யத்தில் சேர ஜூலி முயற்சிப்பதாகவும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஜூலியின் அடுத்த நடவடிக்கைதான் என்னவோ?