
நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் குறுக்கு விசாரணையில் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவரிடம் நீதிபதி நீங்கள் வேண்டுமானால் அமரலாம் , நாற்காலி வேண்டுமானால் தரச்சொல்கிறேன் என பரிவு காட்டினார்.
கொளத்தூர் தொகுதியில் 2011 ஆ ம்ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை எதிர்த்து சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை இன்று நடந்தது. ஒரு மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் நடுவே, நீதிபதி குறுக்கிட்டு மு.க.ஸ்டாலினிடம் பேசினார்.
" நின்று கொண்டு பதில் அளிக்க முடிய வில்லை என்றால் அமர்ந்து பதில் அளிக்கலாம் " என்று கூறினார்
அதற்கு ஸ்டாலின், "I am OK" என சிரித்தவாறே பதில் அளித்தார்
நீதிபதி... எப்போது வேண்டுமானாலும் சொல்லுங்கள், நாற்காலி ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்தார்.
ஸ்டாலின். சரி என்று தெரிவித்தார்.
ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணையில் முக ஸ்டாலின் நின்று கொண்டே பதிலளித்தார்.