
ராகுல் காந்தியை தடுத்து கைது செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பட்டம் நடந்தது. இதில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட்டத்தையே காணோமேன்னு திருநாவுக்கரசரை கலாய்த்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
வள்ளுவர் கோட்டத்தில் இன்று காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்ட கூட்டத்தில் இவிகேஎஸ் இளங்கோவன் பேசிய போது கூட்டம் குறைவாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மீது புகார் கூறியதையடுத்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர் . அவர் பேசியதாவது , காங்கிரஸ் பேரியகத்தின் மிகப்பெரும் தலைவர் ராகுல் காந்தி அவரை அவரது ஜனநாஅயக பணியை ஆற்ற விடாமல் மோடி அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது.
இங்கு மேடையில் அனைத்து தலைவர்களும் கூடியுள்ளதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் என்ன ஒரு வருத்தம் மேடையில் இருக்கும் அளவுக்கு இங்கே கீழே தொண்டர்கள் கூடவில்லையே என்பது தான் வருத்தமாக இருக்கிறது.
என்று கூட்டம் இல்லாததை நக்கல் அடித்தார். இதனால் மேடையில் இருந்த தலைவர்கள் முகம் சுளித்தனர். இது பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ்காரர் ஒருவர் இவர் தலைவராக இருந்த காலத்தில் எத்தனை போராட்டங்கள் நடத்தியிருக்கிறார், எத்தனை ஆயிரம் பேரை கூட்டியிருக்கிறார், என்று காட்டமாக கேட்டார்.