
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போல்லோ தலைவர் பிரதாப் சி ரெட்டி முதன் முறையாக வாய் திறந்துள்ளார்.
இந்த பேட்டியில் பல முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார் பிரதாப் சி ரெட்டி.
தனது பேட்டியின் போது ,
எல்லா நேரத்திலும் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார். அதனால் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
இது ஏதோ ஒரு மருத்துவர் அல்லது ஒரு மருத்துவமனையின் சாதனை மட்டுமல்ல.ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கும் மிகபெரிய மருத்துவ குழுவினரின் முயற்சியாகும்.
மருத்துவமனை என்னதான் முயற்சி எடுத்தாலும் கோடி கணக்கான மக்களின் பிரார்த்தனை தன் ஜெயலலிதா இந்தளவுக்கு குணமாகி உள்ளதற்கு காரணம் என பிரதாப் சி ரெட்டி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
எப்போது டிஸ்சார்ஜ் செய்யபடுவார் என்பது குறித்த கேள்விக்கு ,
எப்போது வீட்டிற்கு செல்லவேண்டும் என்பதை ஜெயலலிதாவே முடிவு செய்வார் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
45 நாட்களுக்கு பிறகு பிரதாப் சி ரெட்டி முன்வந்து பேட்டியளித்திருப்பது ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் எற்பட்டுலதையே காட்டுகிறது.