
வேட்பாளர்களுக்கு அங்கரிக்கப்பட்ட கட்சி சின்னம் வழங்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு அளித்த படிவத்தில் ஜெயலலிதா கைரேகை பதிவு செய்வது சட்டவிரோதமானது எனவே அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவை நிராகரிக்க கோரி டிராபிக் ராம சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் இருந்தார்.
இந்த நிலையில் தற்போது வேட்புமனு பரீசீலினை நடைபெற்று கொண்டிருப்பதால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் டிராபிக் ராமசாமி முறையீட்டார்.
அப்போது தலைமை நீதிபதி திங்கட்கிழமை வழக்கு பட்டியிடப்பட்டுள்ளதால், தற்போது இந்த வழக்கை விசாரிக்க வேண்டியம் அவசியம் இல்லை, எனவே திங்கட்கிழமை அன்று பார்த்துகொள்ளலாம் என தெரிவித்து டிராபிக் ராமசாமி முறையீட்டை தலைமை நீதிபதி நிராகரித்தார்.
எனவே இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது