
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் மத்திய அரசை கண்டித்து பேசி விட்டு திடீரென மாநில அரசை ஒரு பிடி பிடித்தார்.
முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று வர வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, முதல்வர் உடல்நிலை பற்றி பேசவேண்டுமானால் நன்றக இருக்கிறார், பேசுகிறார் இப்படித்தான் சொல்கிறார்கள் , முதல்வர் உடல் நிலை பற்றி பேசினலே கைது செய்வது கண்டிக்க தக்கது.
பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது தமிழகத்தில் ராஜாஜி, காமராஜ் ஆட்சி, காமராஜர் ஆட்சி, அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி, எம்.ஜிஆர் ஆட்சிகள் நடந்தது . ஆனால் இப்போது நடப்பது கைநாட்டு ஆட்சி .
அனைத்து பணிகளும் முடங்கி கிடக்கும் சூழ்நிலை கைநாட்டு போட்டு அரசாங்கம் நடத்தும் நிலை உள்ளது என்று ஈவி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.