மாட்டு வண்டியில் ஏறப்போகும் ஜெ.பி நட்டா.. அமித்ஷாவுக்கு நிகரான வரவேற்பு கொடுக்க திட்டம். தடபுடல் ஏற்பாடு.

By Ezhilarasan BabuFirst Published Jan 13, 2021, 10:36 AM IST
Highlights

விமான நிலையத்திலிருந்து சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள நம்ம ஊரு பொங்கல் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். இதற்கென மதுரவாயலில் பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

பாரதிய ஜனதா  கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா  நாளை சென்னை வர உள்ளார் என்றும் அவர்  நம்ம ஊரு பொங்கல் விழாவில் பங்கேற்கிறார் எனவும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்

பாரதிய ஜனதா கட்சியின் அகில பாரத தலைவர் திரு.ஜே.பி நட்டா அவர்கள் 14-1-2021தை முதல் நாள் தமிழர் திருநாள் அன்று சென்னை வருகிறார். அன்று மாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க கலை நிகழ்ச்சிகளோடு பெருந்திரளாக திரண்டு உற்சாகமாக வரவேற்பு அளிக்கின்றனர். 

விமான நிலையத்திலிருந்து சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள நம்ம ஊரு பொங்கல் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். இதற்கென மதுரவாயலில் பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் வைக்கும் விழா, விளையாட்டு போட்டிகள், தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு ஏற்பாடுகள் என காணும் பொங்கலை நினைவுகூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. 

முக்கிய சந்திப்பில் இருந்து திரு ஜே.பி நட்டா அவர்கள் மாட்டு வண்டியில் அழைத்து செல்லப்படுகிறார். பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் விழாவில் அகில பாரத தலைவர் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். பின்னர் கலைவாணர் அரங்கில் நடைபெறும் துக்ளக் பத்திரிக்கை விழாவில் கலந்துகொண்டு விட்டு சென்னை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

click me!